ஏகே மோட்டோ ரைடு.. புதிய நிறுவனத்தை துவங்கிய நடிகர் அஜித்!!

 

ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் புதிய நிறுவனத்தை நடிகர் அஜித் குமார் துவங்கியிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாக 260 கோடிக்கு மேல் அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து அஜித் குமார் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். 

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தையடுத்து அஜித் உலக மோட்டார் பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் நடிகர் அஜித் குமார் நேபாளம், மற்றும் பூட்டான் நாடுகளில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருப்பதால் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் பயணித்த புகைப்படங்களைப் பகிர்ந்த அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, அவர் பயணித்த இடங்களை குறிப்பிட்டு மேப் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அதில், தன் படி இந்தியாவில் தெலங்கானா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, ராஜஸ்தான் டெல்லி, சண்டிகர், கார்கில் என பயணித்து பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் அஜித் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். 

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.