AK 62 மாஸ் அப்டேட்டுகள்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்!!

 

நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ‘ஏகே 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாக 260 கோடிக்கு மேல் அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து  வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. 

படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அப்படத்தின் கதை பிடிக்காததால் அதில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட் ஆகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

வலிமை அப்டேட்டுக்கு பின்னர் அஜித் ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த அப்டேட் என்றால் அது ஏகே 62 படத்தின் அப்டேட் தான். ரசிகர்களின் பொறுமையை சோதிக்க விரும்பாத லைகா நிறுவனம், ஒரு வழியாக ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட தயாராகிவிட்டது. ரசிகர் இவ்வளவு நாட்கள் அமைதியாக காத்திருந்ததற்கு பலனாக ஒன்றல்ல அடுத்தடுத்து இரண்டு அப்டேட்டுகள் வெளியாக உள்ளன. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைய உள்ளது.

நடிகர் அஜித் தனது 52-வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தான் ஏகே 62 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட இருக்கிறது. அதன்படி இன்று மாலை 6 மணி அல்லது நள்ளிரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதோடு, அப்படத்தின் டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாம் படக்குழு. இதற்கு ‘விடா முயற்சி’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஏகே 62 படத்தின் டைட்டிலை போஸ்டர் மூலம் வெளியிட உள்ளார்களா அல்லது லியோ பட பாணியில் டீசர் மூலம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் அப்படத்தின் டைட்டில் வெளியாவது மட்டும் உறுதி. இதையடுத்து மே மாதத்தில் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி, இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் ஒருபக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.