அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் படக்குழு!

 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்தின் 63-வது படமாக ‘குட் பேட் அக்லி’ படம் உருவாகிறது. இதனை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது. இது படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த லுக் உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது, ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில்  படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.