மகனுக்கு ஷூ மாட்டிவிட்ட அஜித்.. இன்ஸ்டாவில் வைரலாகும் ஷாலினியின் பதிவு
நடிகர் அஜித்குமார் தனது மகன் ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது.
சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜித்குமார், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடினார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட அவர், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8-ம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஜித்குமார் அவர் மகனான ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)
‘உங்களால் ஜெயிக்க முடியாது’ என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான்” என்ற தலைப்பில் பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.