காதலரை கரம் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை ரம்யா பாண்டியன் - யோகா பயிற்சியாளர் லோவெல் தவான் இருவருக்கும் ரிஷிகேஷில் இன்று திருமணம் நடைபெற்றது.
2015-ம் ஆண்டு டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் 2016-ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது. இப்படம் பல விருதுகளையும் பெற்றது. அடுத்ததாக சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆன் தேவதை படத்தில் நடித்தார். பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.
இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார். பிக் பாஸ் போட்டியில் இறுதிவரை தாக்குப்பிடித்து ரம்யா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் சினிமா பட வாய்ப்புகள் என அடுத்தடுத்து ரம்யா பாண்டியனுக்கு சான்ஸ் கிடைத்து இன்று செம்ம பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் சேர்ந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளராக வந்தவர்தான் லொவல் தவான். இருவருக்கும் பார்த்த உடனே காதலில் விழுந்ததாகவும் தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.