பிரபல ஆபாச பட நடிகை தற்கொலை.. துக்கம் அனுஷ்டிக்கும் ரசிகர்கள்!

 

ஆபாச பட நடிகை காக்னி லின் கார்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2005-ம் ஆண்டுக்கு மேல் வயது வந்தோருக்கான திரைப்படங்களில் காக்னி லின் கார்டர் (36) நடிக்க தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே அவர் அத்துறையில் பிரதான நட்சத்திரமாக உயர்ந்தார். அடுத்த சில வருடங்களில் 300-க்கும் மேலான தலைப்புகளில் காக்னியை மையமாகக் கொண்ட வயது வந்தோர் படங்கள் வெளியாகி வசூலை வாரிக் குவித்தன. ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நட்சத்திரமாக அவர் உயர்ந்ததில், விளம்பரம் மூலமாகவும் தனியாக வருமான ஈட்ட தொடங்கினார்.

ஆபாச திரைப்பட சந்தையின் உச்சத்தில் இருந்தபோது திடீரென காக்னி அதிலிருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவருக்கான திரை வாய்ப்புகளும், பெரும் வருமானமும் காத்திருந்தபோதும் அவற்றை உதறினார். அதற்கு முன்னதாக காக்னி ஈடுபட்டிருந்த பல்வேறு துறையிலான முயற்சிகளும், அவற்றில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தபோதும் அவை சோபிக்காததுமே காரணம்.

சினிமா நடிப்பு, பாடகி, நடனக் கலைஞர், உடற்பயிற்சி ஆலோசகர் என பல முகங்கள் கொண்டிருந்தார் காக்னி. ஆனால் அத்துறைகளில் எல்லாம் அவரால் ஏனோ எடுபட முடியவில்லை. இதனால் வெறுப்பின் உச்சத்தில் ஆபாச துறையில் கால் வைத்தார். முந்தைய துறைகளில் நிராகரிக்கப்பட்டதற்கு ஈடுசெய்யும் வகையில் மொத்தமாக, புதிய துறையில் உச்சம் தொட்டார். பெரும் வருமானத்தையும் ஈட்டினார்.

கடைசியில், ஆபாச நட்சத்திரமாக அத்துறையின் உச்சத்தில் இருந்தபோது சட்டென அதிலிருந்து விலகினார். சம்பாதித்த அனைத்தையும் முதலாக்கி அக்ரோனில் சொந்தமாக உடற்பயிற்சி ஸ்டுடியோ ஒன்றை அமைத்தார். தொடக்கத்தில் நன்றாக சென்றாலும், காக்னி மீது படிந்த ஆபாச நடிகை என்ற முத்திரை அவரை எங்கு சென்றாலும் துரத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கும், அழுத்தத்துக்கும் ஆளான காக்னி கடந்த வாரம் ஓஹியோவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, காக்னியை விமரிசையாக இறுதி வழியனுப்பல் செய்யவும், அவருக்கு பிரத்யேக நினைவுச் சின்னம் அமைக்கவும், அவரது உடற்பயிற்சிக் கூட நிர்வாகிகள் சார்பில் இணையதளத்தில் நிதி திரட்டி வருகிறார்கள். காக்னியின் ரசிகர்கள், வருத்தத்தை பதிவு செய்ததோடு, பெருமளவு நிதியளித்தும் வருகின்றனர். தேவைக்கும் அதிகமாக நிதி சேர்ந்ததில், காக்னி அதிகம் நேசித்த விலங்குகளின் பராமரிப்புக்காக கணிசமான தொகையை ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.