நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம்.. இங்கிலாந்து நடிகரை மனந்தார்.. வைரலாகும் போட்டோஸ்

 

நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2010-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அந்த படத்தில் க்யூட்டான வெள்ளைக்காரப் பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0, ‘மிஷன் அத்தியாயம் 1’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.