மகாபாரதத்தில் நடிகர் சூர்யா.. அடுத்த இந்திப்படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!!

 

நடிகர் சூர்யா மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1997-ல் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. அதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுபார், ப்ரண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, பிதாமகன், வேல், சிங்கம், சூரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் கடந்தாண்டு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதேபோல் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்றும் அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சூர்யா பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மவுரியா என்பவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மகாபாரதத்தில் உள்ள கர்ணன் கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ’ரத்த சரித்திரா’ என்ற இந்தி படத்தில் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.