நடிகர் மனோபாலாவின் கடைசி தருணங்கள்.. கண் கலங்கவைக்கும் வீடியோ!!

 

பிரபல நடிகர் மனோபாலாவின் கடைசி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1982-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. அதனைத் தொடர்ந்து பிள்ளைநிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1994-ல் வெளியான ‘தாய்மாமன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால், மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களை இவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் கூட சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி திடீரென காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் தயாரிப்பாளர் பன்முகம் கொண்டவர். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோபாலாவுடன் கடைசியாக அவரது குடும்பத்தினர் செலவழித்த நிமிடங்களை அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. எப்பொழுதும் மிகவும் கலகலப்பாக பேசக் கூடிய மனோபாலா இந்த வீடியோவில் இருக்கும் நிலை ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.

<a href=https://youtube.com/embed/VKR1SWxrYD0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/VKR1SWxrYD0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

வீடியோவில் நினைவிழந்த நிலையில் இருக்கும் மனோபாலாவை சிரிக்க வைக்க அவரது மனைவி மற்றும் மகன் ஹரிஷ் உள்ளிட்டோர் முற்படுகின்றனர். அவரது உதவியாளர் குயில புடிச்சி கூண்டில் அடச்சி பாடலை பாடலாமா சார் எனக் கேட்கிறார். பின்னர் அவரது மகன் ஹரிஷ் அவருக்காக பாடல் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது அதிகம் கவனம் பெற்றுவருகிறது.