அனுமாருக்காக ஒரு சீட்டு ஒதுக்கப்படும்.. இணையத்தில் வைரலாகும் ஆதிபுருஷ் மீம்ஸ்!

 

ஆதிபுருஷ் படத்தின் திரையரங்குகளில் அனுமாருக்காக ஒரு சீட்டு ஒதுக்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பு குழுமம் அறிவித்ததை தொடர்ந்து நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆதிபுருஷ் படக்குழுவின் அறிவிப்பிற்கு பிறகு அனுமார் தான் சமூக வலைத்தளம் முழுவதும் நிறைந்திருக்கிறார். அப்படி ட்ரெண்டாகி வரும் ஒரு சில மீம்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஐயா நான் வணங்கும் அனுமாரே, மத்தவங்க மாதிரி உனக்கு ஒரு சீட்டுலாம் கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன். தமிழ்நாட்டுல எல்லா சீட்டும் உங்களுக்குதான்.

அனுமன் வேஷம் போட்டுட்டு தியேட்டர் போன ஆதிபுருஷ் படத்துக்கு இலவச டிக்கெட் கிடைக்குமா?

அப்ப உனக்கு அனுமார் மட்டும்தான் கடவுள்? அவரோட பாஸ் ராமரெல்லாம் பாத்தா உனக்கு சாமியா தெரியல?

3வது ஷோவுலேயே ஆஞ்சிநேயர் மட்டும்தான் இருப்பாரு ஜீ. அதுக்கு எதுக்கு ஒவ்வொரு ஷோவுக்கும் ஒரு சீட்டு?

ஐயோ நமக்கு ஒரு சீட்டு ஒதுக்குறேன்னு சொன்னானுங்களே, ஆனா தியேட்டர்லையே நாம மட்டும்தான் இருப்போம்னு சொல்லாம விட்டுட்டானுங்களே.

ஐயா ஆஞ்சிநேயா எல்லா சீட்டையும் நீயே வெச்சிக்கோ. ஆனா, இந்த படத்துல இருந்து மட்டும் மக்களை காப்பாத்திடு.

என்னடா டெய்லி மூணு ஷோவுக்கு போய் படம் பாத்துட்டு வரணுமா ஆஞ்சிநேயருக்கே வெயில் வெறுத்துறும்.

ஐயோ ஜூன் 16 இலவச படத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை பேரு இப்டி வேஷம் போட்டுட்டு வர போறாங்களோ!

தம்பி அந்த ஆறாம் நம்பர் சீட்ல உட்காந்துருக்க அனுமாருக்கு ஒரு பனானா சிப்ஸ் வித் எக்ஸ்ட்ரா சீஸ். 

ஆஞ்சிநேயர் சார், ஆஞ்சிநேயர் சார் அந்த மலையை தூக்கும்போது உங்க கை வலிக்கவே இல்லையா? எந்த ஜிம்முக்கு போறீங்க?

நல்ல வேளை இப்பலாம் பழைய மாதிரி ரீல் பேட்டி இல்ல, அப்புறம் அருணாச்சலம் கதை மாதிரி ஆகிடும்.