பிரபல சினிமா நடிகருக்கு திடீர் திருமணம்? கல்யாண அப்டேட் கொடுத்த பிரேம்ஜி!
இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரன் தனது திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
2006-ல் நடிகர் சிலம்பரசன் இயக்கி, நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘வல்லவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரேம்ஜி. இதைத் தொடர்ந்து இவர் சென்னை 28 படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் ஏராளமான படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
அந்த வகையில், இவர் மற்ற இயக்குனர்கள் படங்களில் நடித்ததை விட தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்டவை பிரேம்ஜிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இவர் நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை, பார்ட்டி போன்ற திரைப்படங்களுக்கு பிரேம்ஜி தான் இசையமைத்து இருந்தார். இதுதவிர மங்காத்தா, வல்லவன், கோவா, 12பி, ராம், திருப்பாச்சி, சென்னை 28, போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் பல வெற்றிப் பாடல்களை பாடியும் இருக்கிறார்.