கனடா அரசுக்கு நன்றி தெரிவித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!! ஏன் தெரியுமா?

 

கனடாவில் ஒரு தெருவிற்கு உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான 'ஏ.ஆர். ரகுமான்' பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

1992-ம் ஆண்டு மணிரத்தின்ம இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன், அயலான், கோப்ரா, இரவினில் நிழல் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார்.

இசைதுறையில் பல்வேறு சாதனைகளையும் உறிய விருதுகளையும் பெற்றுள்ள அவர் இன்னும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை வியக்கவைத்து வருகிறார். தென் இந்திய மொழிகள், வடமொழிகளையும் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்கள் வரை ஏ.ஆர்.ரகுமானின் இசை பரவி இருக்கிறது.

இந்நிலையில், கனடாவின் மார்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெயரை அந்நாட்டு அரசு சூட்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான் கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் நிறை விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிட்டி ஆஃப் மார்க்கம் பகுதியில் உள்ள தெருவுக்கு தன் பெயரை சூட்டியதன் மூலம், தன் வாழ்நாளில் இதை நினைத்துப் பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார். கனடாவின் மார்க்கம் மேயர் ( ஃபிராங்க் ஸ்கார்பிட்டி ) மற்றும் ஆலோசகர்கள், இந்திய துணைத் தூதரக ஜெனரல் ( அபூர்வா ஸ்ரீவஸ்தவா ) மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் தான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் என்னுடையவர் அல்ல. அதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கமுள்ளவர் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கடவுளின் குணம். ஒருவர் இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதியையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என தெரிவித்துள்ளார்.

அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் எனக்கு உத்வேகத்தை அளித்தவர்கள். மேலும் பலவற்றைச் செய்வதற்கும் உத்வேகமாக இருப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

சோர்வடையாமல், ஓய்வு பெறாமல் இன்னும் தான் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது. மேலும் நிறைய மக்களை இணைக்க வேண்டி உள்ளது என்று அறிக்கையில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.