எம்.பி.யாக இன்று பதவியேற்கிறார் இளையராஜா!!

 
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் தர்மசாலா கோவில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் ராஜ்யசபா நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர்.
கடந்த திங்கள்கிழமை அன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டோர், மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், அன்றைய தினம் இளையராஜா பதவியேற்காத நிலையில், இன்று (ஜுலை 25) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக, டெல்லி சென்ற இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.