13 வருட காதல்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

 

நடிகை கீர்த்தி சுரேஷும், கேரளாவை சேர்ந்த ஒருவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும்  ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் உடன் சாமி 2, விஷாலுடன் சண்டைக்கோழி 2 என டாப் ஹீரோக்களுடன் ரவுண்ட் கட்டினார். சூப்பர் ஸ்டார் ர்ஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்த கீர்த்தி, உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் விஜய், அனிருத் உள்ளிட்ட பல நபர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அவ்வப்போது இவரது திருமணம் குறித்த வதந்தி செய்திகளாக வெளியாகி அது வைரலாக பேசப்படும். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என மீண்டும் பேச்சு கிளம்பியிருக்கிறது. இம்முறை நகைக்கடை உரிமையாளரின் மகன் தான் மாப்பிள்ளை என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மகனும், கீர்த்தி சுரேஷும் 13 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என பேசப்படுகிறது. இந்த திருமணம் குறித்து கீர்த்தியோ, அவரின் பெற்றோரோ அறிவிப்பு வெளியிடும் வரை நம்ப முடியாது. ஏனென்றால் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என தகவல் வெளியாகியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.