இன்று சந்திர கிரகணம்.. நேரம் குறித்த முழு தகவல்கள்.. கோவிலுக்கு செல்லலாமா? ஜோதிடம் சொல்வது என்ன?

 

2023-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பௌர்ணமி தினமான இன்று (மே 5) வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நடைபெறும். ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில், இரண்டு சந்திர கிரகணம், இரண்டு சூரிய கிரகணம் நிகழும். ஆனால், சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழும் இகழும் என ஜோதிடம் கூறுகிறது.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழும். ​​பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்திய நேரப்படி கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இரவு 10.52.59 மணிக்கு கிரகணம் உச்சம் அடைந்து, மே 6-ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறையும். இந்த கிரகணம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நிகழ உள்ளது. பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் - பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும் தான் இந்தியாவில் தெரியும். சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான ஜோதிட காரணங்கள் பற்றி காணலாம்.

வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழல்தான் கிரகணம் என கூறுகிறது அறிவியல். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.

சந்திர கிரகணம் சூர்யனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே, கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் - விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம். 

இன்று நிகழ உள்ள ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்தியா உட்பட பல நாடுகளில் தென்படும். அதாவது, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்களும் பார்க்கலாம். மேலும், பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம்.

புத்த பூர்ணிமா நாளான இன்று நடைபெறும் சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படும் என்பதால், இந்த கிரகண தோஷம் இந்தியாவுக்கும் இருக்கும். எனவே, கிரகண நேரத்தில் கோவில்கள் மூடப்படும். எனவே, கோயில்களுக்கு செல்வதை தவிர்க்கவும். வீட்டிலேயே இறைவழிபாட்டு மந்திரங்களை கூறலாம்.