அதிர்ச்சி!  அம்மா உணவகங்களில் மீண்டும் உணவுக்கு  கட்டணம்!  

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னை முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் சத்தான உணவு வழங்கப்பட்டு வந்தது. இது வரை சென்னையில் மட்டும் உணவிற்காக 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், இந்த அறிவிப்பால் சுமார் ஒரு கோடி பேர் வரை பயன்பெற்றுள்ளார்கள் எனவும் அரசின் செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு
 

அதிர்ச்சி!  அம்மா உணவகங்களில் மீண்டும் உணவுக்கு  கட்டணம்!  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில்  ஏழை எளிய மக்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன்  சென்னை முழுவதும் உள்ள  407 அம்மா உணவகங்களில்  மூன்று வேளையும் சத்தான  உணவு வழங்கப்பட்டு வந்தது.

இது வரை  சென்னையில்  மட்டும் உணவிற்காக 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், இந்த அறிவிப்பால் சுமார் ஒரு கோடி பேர்  வரை பயன்பெற்றுள்ளார்கள் எனவும் அரசின் செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு முடிவடைந்த நிலையில்  இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டண முறைப்படியே இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காலத்தில் இலவசமாக சாப்பிட்டவர்கள் பலர் இன்று கட்டண முறை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் பல அம்மா உணவகங்களிலும் பார்க்க முடிந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web