இன்று இரவு 9 மணிக்கு அமிதாப் – ரஜினி நடித்த குறும்படம் தொலைக்காட்சியில் வெளியீடு!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாடத் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்தில் ஃபேமிலி என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் பிரசூன் பாண்டே. சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, அலியா பட், சிரஞ்சீவி, மோகன்லால், சிவராஜ்குமார், சோனாலி குல்கர்னி, ப்ரொசென்ஜித் சாட்டர்ஜி, தில்ஜித் தோசன்ஜ் என இந்தியாவின் அனைத்து மொழிகளின் முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். சோனி பிக்சர்ஸ் தொலைக்காட்சியின் அனைத்து சேனல்களிலும் திங்கட்கிழமை இரவு 9 மணி
 

இன்று இரவு 9 மணிக்கு அமிதாப் – ரஜினி நடித்த குறும்படம் தொலைக்காட்சியில் வெளியீடு!கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாடத் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்தில் ஃபேமிலி என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் பிரசூன் பாண்டே.

சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, அலியா பட், சிரஞ்சீவி, மோகன்லால், சிவராஜ்குமார், சோனாலி குல்கர்னி, ப்ரொசென்ஜித் சாட்டர்ஜி, தில்ஜித் தோசன்ஜ் என இந்தியாவின் அனைத்து மொழிகளின் முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் தொலைக்காட்சியின் அனைத்து சேனல்களிலும் திங்கட்கிழமை இரவு 9 மணி இந்த குறும்படம் வெளியாகிறது. முதன் முதலாக நேரடி படப்பிடிப்பு இல்லாமல், அவரவர் வீட்டிலிருந்தே நடிகர், நடிகைகள் நடித்துள்ள முதல் படமாகவும் அமைந்துள்ளது.

இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளது.  படத்தின் மார்க்கெட்டிங் பார்ட்னர்களான ஹைப்பர் மார்க்கெட்,  மளிகைக் கடைகளின் மூலம் ஆல் இந்தியா ஃபிலிம் ஃபெடரேஷன் ஊழியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான டிஜிட்டல் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.

டிஸ்கவரி சேனல் மூலம் சின்னத்திரைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது தடவையாக ஃபேமிலி குறும்படம் மூலம் நேரடி தொலைக்காட்சி குறும்படத்தில் தோன்றுகிறார்.

A1TamilNews.com

From around the web