இந்தியைத் திணிப்போம்ன்னு சொல்லல்லியே – இப்படிச் சொல்றது அமைச்சர் அமித் ஷா!

ராஞ்சி : மற்ற மொழிகளின் மீது இந்தியைத் திணிப்போம் என்று நான் சொல்லவில்லை , தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ நான் ஒரு போது இந்தியை மற்ற மாநில மொழிகளின் மீது திணிக்க வேண்டும் என்று கூற வில்லை. தாய்மொழிக்கு அடுத்து இந்தியை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை தான் வைத்தேன்,” என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
 

இந்தியைத் திணிப்போம்ன்னு சொல்லல்லியே – இப்படிச் சொல்றது அமைச்சர் அமித் ஷா!ராஞ்சி : மற்ற மொழிகளின் மீது இந்தியைத் திணிப்போம் என்று நான் சொல்லவில்லை , தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். 

ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ நான் ஒரு போது இந்தியை மற்ற மாநில மொழிகளின் மீது திணிக்க வேண்டும் என்று கூற வில்லை.  தாய்மொழிக்கு அடுத்து இந்தியை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை தான் வைத்தேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், ”நானே இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலத்திலிருந்து வந்துள்ளேன்.  நான் சொன்னதை கவனமாகக் கேளுங்கள். சிலர் அரசியல் செய்ய விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம். நமது இந்திய மொழிகளை பலப்படுத்த வேண்டும் என்று தான் நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். தாய் மொழி என்று நான் சொல்வது இந்தியை அல்ல. மாநில மொழிகளும் உள்ளன. இரண்டாவது மொழியாகத் தான் இந்தியை கற்கச் சொன்னேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 14ம் தேதி ட்விட்டரில் அமித் ஷா கூறியிருந்ததாவது,” இந்தி மொழி மட்டும் தான் இந்தியாவை ஒன்றிணைக்கும். இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மை உள்ளன.  ஆனால், இந்தியாவுக்கு என்று ஒரே மொழி இருக்க வேண்டும். அது தான் இந்தியாவை உலகத்தில் அடையாளப்படுத்தும். ஒரு மொழி இந்தியாவை இணைக்க முடியும் என்றால் அது இந்தி தான்,” என்று கூறியிருந்தார்.

இந்தியை மற்ற மொழிகள் மீது திணிக்கச் சொல்லவில்லை என்று தற்போது அமித் ஷா மறுத்துள்ளார். கடந்த 4 நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் எழுந்து கொண்டிருந்தது.

நான்கு நாட்களாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சனை பற்றிய பேச்சும் குறைந்து இருந்தது. அவர் நினைச்சது நடந்துடுச்சு போலிருக்கு!

– வணக்கம் இந்தியா

From around the web