அமெரிக்கப் பள்ளியில் தமிழ் படிக்க ஊக்கத்தொகை.. தமிழர்கள் ஏற்பாடு!

அமெரிக்கப் பள்ளியில் தமிழ் மொழிப் பாடம் படிக்கும் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டல்லாஸ் மாநகரப் பகுதியில் உள்ள ஃப்ரிஸ்கோ மாவட்டத்தில் இந்த திட்டத்தை அமல் படுத்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டத்தின் கீழ் இயங்கும் ஃப்ரிஸ்கோ கல்வி அறக்கட்டளையில், 12 ஆயிரத்து 500 டாலர்கள் வைப்புத் தொகையாக செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட்டத்தில் தமிழ் மொழிப் பாடத்தில்
 

அமெரிக்கப் பள்ளியில் தமிழ் படிக்க ஊக்கத்தொகை.. தமிழர்கள் ஏற்பாடு!மெரிக்கப் பள்ளியில் தமிழ் மொழிப் பாடம் படிக்கும் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டல்லாஸ் மாநகரப் பகுதியில் உள்ள ஃப்ரிஸ்கோ மாவட்டத்தில் இந்த திட்டத்தை அமல் படுத்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டத்தின் கீழ் இயங்கும் ஃப்ரிஸ்கோ கல்வி அறக்கட்டளையில், 12 ஆயிரத்து 500 டாலர்கள் வைப்புத் தொகையாக செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட்டத்தில் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறும் வெற்றியாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 டாலர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இது குறித்த தகவலை சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 9 வது நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஸ்ரீராம் தெரிவித்தார். ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டம் தான் டெக்சாஸ் மாநிலத்தில் முதன் முதலாக தமிழ் மொழிப் பாடத்திற்கு அயல்நாட்டு மொழிக்கான மதிப்பெண்கள் வழங்கிய கல்வி மாவட்டம் என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கப் பள்ளியில் தமிழ் படிக்க ஊக்கத்தொகை.. தமிழர்கள் ஏற்பாடு!

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 9 வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி மூலம் மேலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க்கப்பட்டது. 9வது ஆண்டாக தமிழ்நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் அமைப்புக்கு 15 ஆயிரம் டாலர்கள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்கான ஆடு வளர்ப்பு திட்டம், உதவும் கரங்கள் அமைப்பில் வளரும் பெண்களுக்கான திருமணத் திட்டம், கல்வி ஊக்கத்தொகை போன்ற திட்டங்களுக்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டோரியன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்திற்காக 5 ஆயிரம் டாலர்கள் மற்றும் திருக்குறள் போட்டிக்காக 5 ஆயிரம் டாலர்களும் நிதியுதவியும் வழங்கினார்கள். அமெரிக்காவில் 13 வது ஆண்டாக “ஒரு குறள் ஒரு டாலர்” போட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக அமெரிக்க ஜியோ பீ சேம்பியன், இளம் தொழிலதிபர், ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் என பன்முகம் கொண்ட அமெரிக்க தமிழ் இளைஞர் ஆதித் மூர்த்தியின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்ப்படுத்துவது என்பதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

– வணக்கம் இந்தியா

From around the web