அமெரிக்காவில் இந்தியர்களின் வீடுகளாகப் பார்த்து கொள்ளை அடித்த கும்பலின் தலைவிக்கு தண்டனை!

டெட்ராய்ட்: அமெரிக்கா முழுவதும் இந்தியர்கள் மற்றும் ஆசிய வம்சாவளியினரின் வீடுகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த கும்பலின் தலைவி 44 வயது சக்கா கேஸ்ட்ரோ மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆட்களை நியமித்து திட்டம் தீட்டி குற்றச் செயல் புரிதல், பயங்கரமான ஆயுதங்கள் வைத்து தாக்குதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் குற்றம் நிருபிக்கப் பட்டுள்ளது. கிழக்கு மிஷிகன் மாநில அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் 4 வாரங்களாக விசாரிக்கப்பட்ட வழக்கில் நீதிபதி லாரி மைக்கெல்சன் தலைமையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை
 

டெட்ராய்ட்: அமெரிக்கா முழுவதும் இந்தியர்கள் மற்றும் ஆசிய வம்சாவளியினரின் வீடுகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த கும்பலின் தலைவி 44 வயது சக்கா கேஸ்ட்ரோ மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆட்களை நியமித்து திட்டம் தீட்டி குற்றச் செயல் புரிதல், பயங்கரமான ஆயுதங்கள்  வைத்து தாக்குதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் குற்றம் நிருபிக்கப் பட்டுள்ளது.  கிழக்கு மிஷிகன் மாநில அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் 4 வாரங்களாக விசாரிக்கப்பட்ட வழக்கில் நீதிபதி லாரி மைக்கெல்சன் தலைமையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை குறித்த விவரம் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும்.

சக்கா கேஸ்ட்ரோ தலைமையில் அமெரிக்கா முழுவதும் குழுக்களாக பிரிந்து சென்று இந்தியர்கள், ஆசிய வம்சாவளியினர்களின் வீடுகளாகப் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்து தாக்கி தங்கம், பணம் உள்ளிட்ட மதிப்புள்ள பொருட்களை கொளை அடித்து வந்துள்ளனர். 

எந்தெந்த நகரங்களில் யார் யார் வீடு என்று விவரங்கள் சேகரித்து சக்கா, குழு அமைப்பாராம். அந்த குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொரு வகையான வேடம்/உடை அணிந்து அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் உள்ளவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார்கள். ஒருவர் அவர்களை மிரட்ட இன்னொருவர் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவரை மிரட்டி பொருள், பணம் இருக்கும் இடத்தை கண்டெடுத்து பின்னர் தப்பி ஓடி விடுவார்களாம்.

ஜார்ஜியா, டெக்சாஸ், ஒஹாயோ, மிஷிகன் மாநிலங்களில் பெருவாரியான இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். எஃப்பிஐ தலைமையிலான மத்திய அரசின் குடியுரிமை, உளவுத் துறை, உள்நாட்டு பாதுகாப்புத் துறையினர் வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.  .

மேலும் மிஷிகன் மாநிலத்தின் வாஷ்டெனா கவுண்டி ஷெரிஃப், ஆன் ஆர்பர், கேண்டன் நகரங்களின் காவல் துறை, ஒஹாயோ மாநிலத்தின் பீச்வுட் காவல்துறை, ஜார்ஜியா மாநிலத்தின் காப் கவுண்டி மாவட்ட நீதிமன்ற அலுவலகம், குவினெட் கவுண்டி காவல்துறை, துலுத், மில்டன் நகரங்களின் காவல்துறை, நியூயார்க் மாநிலத்தின் நாசாவ் கவுண்டி காவல்துறை, டென்னசி மாநில நெடுஞ்சாலை காவல்துறை, டெக்சாஸ் மாநிலத்தின் அலன், காப்பல், ஃப்ளவர்மவுண்ட், கேரல்டன், லூயிஸ்வில், சௌத்லேக் நகரங்களின் காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணைக்கு பக்கபலமாக உறுதுணையாக இருந்துள்ளனர். இந்த நகரங்கள், கவுண்டிகளின் எல்லைக்குள் சக்கா கேஸ்ட்ரோ குழுவினர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

நேரடியாக குற்றங்களில் ஈடுபடாமல் ஆட்களை நியமித்து இத்தகைய குற்றச் செயல்கள், கிட்டத்தட்ட கூலிப்படை வைத்து செயல்படுபவர்களை தண்டிப்பதற்காகவே அமெரிக்காவில் ரிக்கோ என்றழைக்கப்படும் Racketeer Influenced and Corrupt Organizations Act என்ற சட்டம் மத்திய் அரசின் கீழ் அமலில் இருக்கிறது. சக்கா கேஸ்ட்ரோ நேரடியாக வீடுகளுக்குச் சென்று கொள்ளை அடிக்காததால் ரிக்கோ சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பெரிய கொள்ளைக் கும்பல் பிடிபட்ட போதிலும், அமெரிக்க இந்தியர்களுக்கு இத்தகைய கொள்ளை கும்பல்களிடமிருந்து ஆபத்து முற்றிலும் நீங்கி விட்டதாகக் கூறமுடியாது. செக்யூரிட்டி கேமிரா, செக்யூரிட்டி சர்வீசஸ் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வதும், உள்ளூர் காவல் துறையினரின் அறிவுறுத்தல் படி கூடுதல் பாதுகாப்புகளுடன் இருந்து கொள்வதும் அவசியமாகும்.

படம் – Allen Police Dept

From around the web