ட்ரம்ப் நிறுவனத்தின் பிஸினஸ் பார்ட்னரா இதைச் செய்தார்?

மெம்பிஸ்: அமெரிக்க இந்தியர் 56 வயது தினேஷ் சாவ்லா மீது மெம்பிஸ் போலீசார் சூட்கேஸ்கள் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் மிசிசிபி மாநிலத்தில் 17 ஹோட்டல்கள் நடத்து சாவ்லா ஹோட்டல்ஸ் குழுமத்தின் 50 சதவீத பங்குதாரர் ஆவார். மெம்பிஸ் விமான நிலையத்தில் சூட்கேஸ்கள் வரும் கன்வேயர் பெல்டிலிருந்து ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்று அவருடைய காரில் வைத்துப் பூட்டியதையும், பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்று விமானத்தில் தினேஷ் சென்றதையும் போலீசார் கவனித்துள்ளனர். தினேஷ் விமானத்தில்
 

மெம்பிஸ்: அமெரிக்க இந்தியர் 56 வயது தினேஷ் சாவ்லா மீது மெம்பிஸ் போலீசார் சூட்கேஸ்கள் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் மிசிசிபி மாநிலத்தில் 17 ஹோட்டல்கள் நடத்து சாவ்லா ஹோட்டல்ஸ் குழுமத்தின் 50 சதவீத பங்குதாரர் ஆவார்.

மெம்பிஸ் விமான நிலையத்தில் சூட்கேஸ்கள் வரும் கன்வேயர் பெல்டிலிருந்து ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்று அவருடைய காரில் வைத்துப் பூட்டியதையும், பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்று விமானத்தில் தினேஷ் சென்றதையும் போலீசார் கவனித்துள்ளனர்.

தினேஷ் விமானத்தில் ஏறிச் சென்றதும் அவருடைய காரை சோதனையிட்ட போலீசார், காருக்குள் பல சூட்கேஸ்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த சூட்கேஸ்களில் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புடைய பொருட்கள் இருந்துள்ளன. வெளியூர் சென்ற தினேஷ் சாவ்லா மெம்பிஸ் திரும்பும் வரை காத்திருந்த போலீசார், விமான நிலையத்திலேயே தினேஷை கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் தினேஷ். இரு பிரிவுகளில் அவர் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் டாலர்கள் பிணைத் தொகையில் உடனடியாக விடுவிக்கப் பட்டுள்ளார்.

தினேஷின் தந்தை தொடங்கிய ஹோட்டல் நிறுவனத்தின் கீழ் தற்போது 17 ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. தினேஷும் அவருடைய சகோதரரும் நிர்வாகத்தைக் கவனித்து வருவதாகத் தெரிகிறது.

அதிபர் ட்ரம்பின் ஹோட்டல் நிறுவனத்துடன் ஹோட்டல் கட்டுவதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளது தினேஷின் சாவ்லா ஹோட்டல்ஸ் நிறுவனம். 2017ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ட்ரம்ப் நிறுவனத்திற்காக , மிசிசிபி மாநிலத்தில் 4 புதிய ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகளை சாவ்லா ஹோட்டல்ஸ் நிறுவனம் மேற்கொள்வதாக இருந்தது. அரசியல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் அந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

அதிபர் ட்ரம்ப் நிறுவனத்துடன் கூட்டுத் தொழில் செய்ய ஒப்பந்தம் போட்ட நிறுவனத்தின் உரிமையாளர், சூட்கேஸ்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் வெள்ளிக் கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகிரார் தினேஷ் சாவ்லா!

 

படம்: நன்றி WREG

From around the web