அமெரிக்காவின் ”கொலம்பஸ் டே”….

1451 ஆண்டு வடமேற்கு இத்தாலி நாட்டின் ஜெனொவா நகரில் பிறந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டிலிருந்து புது இடங்கள், வணிகப் பொருட்கள் தேடும் முயற்சியில் அட்லாண்டிக் மகாக் கடலை நான்கு முறை பயணித்துள்ளார். அவரின் பயணங்கள் 1492, 1493, 1498, மற்றும் 1502 இல் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பெயின் நாட்டு மன்னர் ஃபெர்னின்டேட், மகாராணி இஸபெலாவின் உந்துதலில், கிரிஸ்டோபர் கொலம்பஸ் தன் முதல் கடல்வழிப் பயணத்தை ஆகஸ்ட் 3 ஆம் நாள், 1492 ஸ்பெயின் நாட்டிலிருந்து சேண்டா மரியா,
 

அமெரிக்காவின் ”கொலம்பஸ் டே”….1451 ஆண்டு வடமேற்கு இத்தாலி நாட்டின் ஜெனொவா நகரில் பிறந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டிலிருந்து புது இடங்கள், வணிகப் பொருட்கள் தேடும் முயற்சியில் அட்லாண்டிக் மகாக் கடலை நான்கு முறை பயணித்துள்ளார். அவரின் பயணங்கள் 1492, 1493, 1498, மற்றும் 1502 இல் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்பெயின் நாட்டு மன்னர் ஃபெர்னின்டேட், மகாராணி இஸபெலாவின் உந்துதலில், கிரிஸ்டோபர் கொலம்பஸ் தன் முதல் கடல்வழிப் பயணத்தை ஆகஸ்ட் 3 ஆம் நாள், 1492 ஸ்பெயின் நாட்டிலிருந்து சேண்டா மரியா, பிண்டா, நீனா, எனும் மூன்று கப்பல்களில், 90 பேர் கொண்ட குழுவுடன் துவங்கினார்.

அவரது இலக்கு, கிழக்கு ஆசியாவிற்கு ஒரு வேகமான குறுக்கு வழி கண்டுபிடிப்பது. சீனா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து நறுமண மசாலாப் பொருட்களையும், பொன்னையும், மற்ற அரியப் பொருட்களையும் வர்த்தகம் செய்வது.

ஆனால் கிழக்கு ஆசியாவிற்கு போவதற்கு பதிலாக அவர் வட அமெரிக்காவின் ஹிஸ்பானியோலாவை, தற்போதைய பஹாமாஸ் தீவை, அக்டோபர் மாதம் 12 ஆம் நாள், 1492 இல் வந்தடைந்துவிட்டார். அவர் வந்தடைந்த வட அமெரிக்காவை புதிய உலகம் என்றனர். இப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என வரலாறு கூறுகிறது.

கொலம்பஸ் குழு பயணித்த சேண்டா மரியா எனும் கப்பல் பழுதடைந்துவிட்டதால், 40 பேர் அமெரிக்காவிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இப்படித்தான் முதன்முதலில் ஐரோப்பியர் அமெரிக்கா வந்தடைந்தனர்.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்னரே வைக்கிங்ஸ் குழு இந்த நிலத்தை கண்டுபிடித்தார்கள் என ஒரு முறண் உள்ளது. ஆனால் அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்னரே இங்கு வாழ்ந்து வந்தார்கள் .

அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் அமெரிக்கா வந்தடைந்ததால், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத இரண்டாம் வாரத்தின் திங்கட்கிழமை அமெரிக்காவில் தேசிய விடுமுறையாக அனுசரிக்கப் படுகிறது. இந்த நாளை பழங்குடியினர் தினம் என்று சில மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள்.

கொலம்பஸ் டே

முதன்முதலாக 1792 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் கொலம்பஸ் அமெரிக்கா வந்தடைந்த 300வது வருடாந்தரக் கொண்டாட்டமாக அனுசரிக்கபட்டது. பின் அதிபர் பெஞ்சமின் ஃப்ராங்ளின், கொலம்பஸ் அமெரிக்கா வந்தடைந்த 400 வருடாந்திர கொண்டாட்டத்தில் கொலம்பஸை கொண்டாட ஒரு நாளை “கொலம்பஸ் டே” என உருவாக்கினார்.

அதன் பின் 1920 ஆம் ஆண்டிலிருந்து தான் கொலம்பஸ் டே வருடாவருடம் கொண்டாடப்பட்டு வந்தாலும், கொலம்பஸ் தேசிய நாளாக அக்டோபர் 12, 1937 இல் தான் அதிபர் ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட்டால் அறிவிக்கப்பட்டது. பின்னர்,  1971ம் ஆண்டு முதல் ”அக்டோபர் இராண்டாம் வார திங்கட்கிழமை” தேசிய விடுமுறை நாளாக்கி, கொலம்பஸ் நாளென அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் பல வீதிகள், ஊர்கள், நகரங்கள், கட்டிடங்கள், ஆறுகள் கொலம்பஸின் பெயரைக் கொண்டவை. கிருஸ்டஃபர் கொலம்பஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் கொலம்பஸ் டே அமெரிக்க இத்தாலியரால் அவர்களின் மரபுகளை கொண்டாடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கொலம்பஸ் டே வட அமெரிக்கா மட்டுமின்றி லத்தீன் அமெரிக்கா, பகாமாஸ், ஸ்பெயின், அர்ஜெண்ட்டீனா, பெலீஸ், மற்றும் உருகுவே போன்ற நாடுகளிலும் கொண்டாடப் படுகின்றது.

அமெரிக்க மண்ணில் இந்த நாளில் பள்ளிகள், அரசாங்க அலுவகங்கள், சில கல்லூரிகள், சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு, நகரங்களில் தேசபக்தி ஊர்வலங்கள் மேற்கொண்டு மக்கள் கொண்டாடி வருகிறார்கள். வருடந்தோறும் நியூயார்க் நகரில் மிகப்பெரிய ஊர்வலம் மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் நினைவாக, அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கொலம்பஸ் என்ற பெயரில் நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒஹாயோ மாநிலத்தின் தலைநகராக விளங்கும் கொலம்பஸ் பெரிய மாநகரமாக விளங்குகிறது.

தேசிய விடுமுறை நாளான கொலம்பஸ் டே அன்று வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி சலுகை வழங்குவதால், ஒரு முக்கிய நுகர்வோருக்கான வர்த்தக நாளாகவும் அமைந்துள்ளது.

புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ

From around the web