ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டிருக்கும் 17,000 ஓட்டுனர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில மக்களிடையேயும், மருத்துவர்களிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள
 

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டிருக்கும் 17,000 ஓட்டுனர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில மக்களிடையேயும், மருத்துவர்களிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசங்கள், கையுறைகள், சானிடைசர்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அத்தோடு கூட இரண்டு மாத ஊதியமும் தரப்படவில்லை என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் 4500 ஆம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

A1TamilNews.com

From around the web