“வீட்டிலிருத்தல்” நேரத்தில் அறிவோம் அம்பேத்கர் – அமெரிக்க அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் 10 நாள் பட்டறை!

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டிலிருந்து கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. புத்தகம் வாசித்தல், விட்டுப்போன திரைப்படங்கள் பார்த்தல் என ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதாக சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் இயங்கி வரும் அம்பேத்கர் – கிங் படிப்பு வட்டத்தின் சார்பில் 10 நாட்கள், அம்பேத்கர் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அமெரிக்கா,
 

“வீட்டிலிருத்தல்” நேரத்தில் அறிவோம் அம்பேத்கர் – அமெரிக்க அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் 10 நாள் பட்டறை!மெரிக்காவிலும், இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டிலிருந்து கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. புத்தகம் வாசித்தல், விட்டுப்போன திரைப்படங்கள் பார்த்தல் என ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதாக சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் இயங்கி வரும் அம்பேத்கர் – கிங் படிப்பு வட்டத்தின் சார்பில் 10 நாட்கள், அம்பேத்கர் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் டாக்டர்.வி.கீதா, சமூக, பொருளாதார, அரசியல்,கலாச்சாரம் என பல்வேறு தளங்களில் அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பு பற்றி உரையாற்றுகிறார்.

சாதி- ஒரு புதிய வார்த்தை, சாதி – தீண்டாமையும் அரசியலும், பார்ப்பனியம், தேசியவாதம் பற்றி அம்பேத்கரின் பார்வைகள், பொருளாதாரம், சோசியலிசம் மற்றும் தீண்டாமை பற்றிய கேள்விகள், புத்தமதமும் சாதி துறத்தலும் என்ற தலைப்புகளில் 10 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் சொற்பொழிவு அறிமுகக் கூட்டத்துடன் திங்கட் கிழமை தொடங்கியது.

தொடர்ந்து, இந்திய நேரப்படி செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 7 மணி, அமெரிக்க பசிபிக் நேரப்படி திங்கள், புதன்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு, ஒரு மணி நேரம் நடைபெற உள்ளது. ஆங்கிலத்தில் நடைபெறும் இந்த சொற்பொழிவில் உலகம் முழுவதும் இருந்தும் ஆர்வலர்கள் https://us04web.zoom.us/j/452299814 என்ற இணைப்பின் வழியாக கலந்து கொள்ளலாம்.

“வீட்டிலிருத்தல்” நேரத்தில் அறிவோம் அம்பேத்கர் – அமெரிக்க அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் 10 நாள் பட்டறை!சொற்பொழிவாற்றும் டாக்டர்.வி.கீதா சென்னையில் வசித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பெண்கள் இயக்கங்களில் தீவிர பங்காற்றி வருகிறார். தமிழ், ஆங்கில இரு மொழி எழுத்தாளரும் ஆவார். 2015ம் ஆண்டு முதல் அம்பேத்கர் பற்றிய இந்த சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார். இது வரையிலும் 20 சொற்பொழிவுளை தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நடத்தி முடித்துள்ளார்.

நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்களுக்கு akscusa.org/lets-read-ambedkar-10-lectures-series/ என்ற இணைப்பில் காணலாம்.

www.A1TamilNews.com

From around the web