ஊழியர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடை உறுதி செய்து அமேசான் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு கட்ட துறைகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளும் அமேசான்,ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் அமேசான் நிறுவனம் அதன் விற்பனையாளர்களுக்கு இலவச சுகாதார காப்பீடை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மருத்துவக் காப்பீட்டின் மூலமாக லட்சக்கணக்கான விற்பனையாளர்கள் பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் ரூ.50,000
 

ஊழியர்களுக்கு  இலவச மருத்துவக் காப்பீடை உறுதி செய்து  அமேசான் அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு கட்ட துறைகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளும் அமேசான்,ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் அமேசான் நிறுவனம் அதன் விற்பனையாளர்களுக்கு இலவச சுகாதார காப்பீடை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த மருத்துவக் காப்பீட்டின் மூலமாக லட்சக்கணக்கான விற்பனையாளர்கள் பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் ரூ.50,000 வரையில் மருத்துவச் சிகிச்சைகளைப் பெறவும், இந்தக் காப்பீடு ஒரு வருடம் வரையில் உபயோகிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2019 முதல் தற்போது வரை உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் , ஜனவரி இதனால், விற்பனையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு , வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த பணியாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் எனவும் அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

A1TamilNews.com

From around the web