மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது. இது குறித்து தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா
 

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை  அனைத்துக் கட்சி கூட்டம்!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது.

இது குறித்து தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web