நீட் எழுதிய மாணவர்கள் அனைவருடைய ஆவணங்களும் ஆய்வு!

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபட்ட மாணவர் உதித் சூர்யா மீதான விசாரணையைத் தொடர்ந்து அனைத்து நீட் தேர்வு மாணவர்களின் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளது. தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யாவின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக் இருந்ததால் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீஸ் விசாரணையில், இரு முறை சென்னையில் நீட் தேர்வில் பெயிலான உதித் சூர்யா, மும்பையைல் ஆள் மாறாட்டம் செய்து வெற்றி பெற்றது தெரிய வந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி
 

நீட் எழுதிய மாணவர்கள் அனைவருடைய ஆவணங்களும் ஆய்வு!

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபட்ட மாணவர் உதித் சூர்யா மீதான விசாரணையைத் தொடர்ந்து அனைத்து நீட் தேர்வு மாணவர்களின் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யாவின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக் இருந்ததால் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீஸ் விசாரணையில், இரு முறை சென்னையில் நீட் தேர்வில் பெயிலான உதித் சூர்யா, மும்பையைல் ஆள் மாறாட்டம் செய்து வெற்றி பெற்றது தெரிய வந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மருத்துவ கல்வி இயக்ககம் அனைத்து மாணவர்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள அனைத்து மாணவ, மாணவியர்களின் ஆவணங்களும் ஆய்வுக்குள்ளாகின்றன.

நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலைத் தருமாறு, பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மாணவிகளின் உடைகளைக் கூட சோதனை போட்டு நீட் தேர்வு எழுதுவதற்கு தமிழகத்தில் கடும் கெடுபிடி விதிக்கப்பட்டது. ஆனால் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர் என்பது நீட் தேர்வின் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதற்கு இந்த முறைகேடுகளே ஒரு காரணமாகப் போதுமானது என்ற கருத்துகளும் எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் கவனிப்பார்களா?

– வணக்கம் இந்தியா

From around the web