வெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்!  தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி விமானத்தில் பயணம் செய்து தமிழகம் வந்தடையும் அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனைக்குப் பிறகு 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபார நோக்கங்களுக்காக 48 மணி நேரத்திற்குள் வெளிநாடு சென்று திரும்புபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
 

வெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்!  தமிழக அரசு அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது  பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு புதிய  கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் படி  விமானத்தில் பயணம் செய்து தமிழகம் வந்தடையும்  அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.  பரிசோதனைக்குப் பிறகு 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வியாபார நோக்கங்களுக்காக 48 மணி நேரத்திற்குள்  வெளிநாடு சென்று திரும்புபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்புபவர்கள் முறையாக  இ-பாஸ் பெற்ற பிறகே பயணப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

A1TamilNews.com

 

From around the web