‘அயோத்திக்கு ராணுவத்தை அனுப்புங்க…’ – உச்சநீதிமன்றத்துக்கு அகிலேஷ் யாதவ் அதிரடி கோரிக்கை!

லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ், அயோதிக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அயோத்தியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தும் அதன் தோழமை இந்து அமைப்புகளும், ராமர் கோவிலை உடனடியாக கட்டவேண்டும் என்ற முழக்கத்துடன் முகாம் இட்டு வருகிறார்கள். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் அங்கு வந்து சேர்கிறார். இரண்டு நாட்கள் அங்கே ராமர் கோவிலை உடனடியாக கட்ட வலியுறுத்தி கூட்டம் நடைபெற
 

‘அயோத்திக்கு ராணுவத்தை அனுப்புங்க…’ – உச்சநீதிமன்றத்துக்கு அகிலேஷ் யாதவ் அதிரடி கோரிக்கை!லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ், அயோதிக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தும் அதன் தோழமை இந்து அமைப்புகளும், ராமர் கோவிலை உடனடியாக கட்டவேண்டும் என்ற முழக்கத்துடன் முகாம் இட்டு வருகிறார்கள். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் அங்கு வந்து சேர்கிறார். இரண்டு நாட்கள் அங்கே ராமர் கோவிலை உடனடியாக கட்ட வலியுறுத்தி கூட்டம் நடைபெற உள்ளது.

அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலை கட்டுவதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்புகள் அங்கு கூடி வருகிறார்கள்.

17 நிமிடத்தில் பாபர் மசூதியை தரை ராம பக்தர்களுக்கு, ராமர் கோவில் கட்ட ஆணை பிறப்பிக்க வைக்க அதிக நேரம் ஆகாது என்று சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர சிங், தேவைப்பட்டால் நவம்பர் 25ம் தேதி, 1992ம் ஆண்டின் வரலாறு மீண்டும் திரும்பும் என்று ஆவேசப் பட்டுள்ளார்.

இந்நிலையில் அகிலேஷ் யாதவ் உச்சநீதிமன்றத்திற்கு ராணுவத்தை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளார். “அயோத்தியில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜக அரசியல் சாசனத்தையோ உச்சநீதிமன்றத்தையோ ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். உத்தரப் பிரதேசத்தில், குறிப்பாக அயோத்தியில் நிலவும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, தேவைப் பட்டால் ராணுவத்தை, உச்சநீதிமன்றம் அனுப்ப வேண்டும்,” என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

தெற்கே ஐயப்பன் கோவில் வடக்கே ராமர் கோவில் என கோவில்களை முன்னிறுத்தி 2019 தேர்தலை எதிர்கொள்ள பாஜக முயற்சி எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– வணக்கம் இந்தியா

From around the web