அஜீத், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ஒத்திவைப்பு!

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஷூட்டிங், இந்த வாரம் தொடங்கபடுவதாக இருந்தது. ஹீரோயின் மேகா ஆகாஷ் கால்ஷீட் பிரச்சனையால் படப்பிடிப்பு அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநகரம், கைதி படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் .இவர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன்,
 

அஜீத், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ஒத்திவைப்பு!

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஷூட்டிங், இந்த வாரம் தொடங்கபடுவதாக இருந்தது. ஹீரோயின் மேகா ஆகாஷ் கால்ஷீட் பிரச்சனையால் படப்பிடிப்பு அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் .இவர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிவமோகா சிறைச்சாலையில் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 40 நாட்கள் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. மழை காரணமாக செட் வேலை முடியாததால், படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியில் தொடங்குவதாக இருந்தது. தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக செட் வேலை இன்னும் முடிவடையவில்லை.படப்பிடிப்பு வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல தல அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பும் சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

https://www.A1TamilNews.com

From around the web