ஹெல்மெட்டை உடைத்து போராட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏக்கள்!

புதுச்சேரி: பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டம் நடத்தினார்கள். புதுச்சேரி சட்டசபை அதிமுக தலைவர் அன்பழகன் தலைமையில் சட்டசபை வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் ஹெல்மெட் அணிய கட்டாய்படுத்துவதை கண்டித்து இந்த போராட்டம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திடம், புதுச்சேரியில் மொபைல் நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்யுமாறு துணை ஆளுநர் தரப்பில்
 
 
புதுச்சேரி: பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டம் நடத்தினார்கள். புதுச்சேரி சட்டசபை அதிமுக தலைவர் அன்பழகன் தலைமையில் சட்டசபை வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.
 
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் ஹெல்மெட் அணிய கட்டாய்படுத்துவதை கண்டித்து இந்த போராட்டம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திடம், புதுச்சேரியில் மொபைல் நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்யுமாறு துணை ஆளுநர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ஸ்பாட்டிலேயே வழக்கு பதிவு செய்து ஃபைன் வசூலிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.  பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என துணை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். எந்த தயவு தாட்சயண்யமும் காட்டப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
ஹெல்மெட் அணிய வேண்டியதின் அவசியம் மற்றும் கட்டாயம் என்பது குறித்து, ஒரு மாத காலத்திற்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
 
ஹெல்மெட்டை உடைத்து போராட்டம் செய்துள்ள அதிமுகவினரின் செயல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விதமான விழிப்புணர்வுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
 
– வணக்கம் இந்தியா

From around the web