போலீஸ்காரர்களிடம் ஆட்டோகிராப்! நடிகர் சூரி நெகிழ்ச்சி!

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணி ஈடு இணையற்றது. செவிலியர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துக் கொண்டார் நடிகர் சூரி. மேலும், கொரோனாவை தடுக்கும் பணியில் காவல்துறையின் பங்களிப்பு மகத்தானது. ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் நேரடியாக நன்றி சொல்வதற்காக இங்கு வந்தேன் என்று கூறி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் சூரி. உடன் காவல்துறை அதிகாரிகளும்
 

போலீஸ்காரர்களிடம் ஆட்டோகிராப்! நடிகர் சூரி நெகிழ்ச்சி!கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணி ஈடு இணையற்றது. செவிலியர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துக் கொண்டார் நடிகர் சூரி.

மேலும், கொரோனாவை தடுக்கும் பணியில் காவல்துறையின் பங்களிப்பு மகத்தானது. ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் நேரடியாக நன்றி சொல்வதற்காக இங்கு வந்தேன் என்று கூறி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் சூரி. உடன் காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் இருந்தார்கள்.

காவல்துறையின் சீரிய பணிகளைப் பாராட்டி அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காகவே வந்ததாகவும் சூரி குறிப்பிட்டார். அவரிடம் டாஸ்மாக் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

போலீசாருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன். என்னை சிக்கலில் மாட்டிவிட்டு அதே போலீஸ்காரர்களால் கைது செய்ய வைக்கப் பார்க்கிறீர்களா? போலீஸ் ஸ்டேஷன் போன புருஷன் எங்கே என்று என் மனைவி தேடிக் கொண்டிருப்பார். நாம எல்லோரும் சேர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் நன்றி சொல்வோம் என்று பிடி கொடுக்காமல் நழுவினார்.

பின்னர், இந்த காலக் கட்டத்திலும் செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்த்து, கொரோனா குறித்த விழிப்புணர்வில் பெரும் பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்கும்  நன்றி என்று கூறினார்.

நடிகர் சூரி நேரில் வந்து நன்றி தெரிவித்து, ஆட்டோகிராப் வாங்கிச் சென்றதால் காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் உற்சாகம் அடைந்தனர்.

www.A1TamilNews.com

 

From around the web