காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க!

முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னணி நடிகருமான நெப்போலியன் காதலர் தினத்தை அன்பு தினமாக கொண்டாடவேண்டும் என்று தெரிவித்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு அதை எப்படிக் கொண்டாடலாம் என்று ஒரு கவிதையாக நெப்போலியன் வெளியிட்டுள்ளார்: காதலர் தினம் இல்லை இல்லை..?? அன்பு தினம்…!! காதல் என்பது என்ன..? அன்பு என்று அர்த்தம்..! அன்பு காதலிக்கு மட்டும்தான் என்பது இல்லை..! உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தலாம்..! ஓர் அறிவு படைத்த தாவரங்கள் முதல், இரண்டு அறிவு படைத்த
 

காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க!முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னணி நடிகருமான நெப்போலியன் காதலர் தினத்தை அன்பு தினமாக கொண்டாடவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

காதலர் தினத்தை முன்னிட்டு அதை எப்படிக் கொண்டாடலாம் என்று ஒரு கவிதையாக நெப்போலியன் வெளியிட்டுள்ளார்:

காதலர் தினம்
இல்லை இல்லை..??
அன்பு தினம்…!!
காதல் என்பது என்ன..?
அன்பு என்று அர்த்தம்..!
அன்பு காதலிக்கு மட்டும்தான் என்பது இல்லை..!
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும்
அன்பு செலுத்தலாம்..!
ஓர் அறிவு படைத்த தாவரங்கள் முதல்,
இரண்டு அறிவு படைத்த நத்தை முதல்,
மூன்று அறிவு படைத்த
எறும்பு முதல்,
நான்கு அறிவு படைத்த
தேனீ முதல்,
ஐந்து அறிவு படைத்த
பாலூட்டிகள் முதல்,
ஆறாவது அறிவு படைத்த மனிதன் என்று அனைத்து உயிர்களிடமும் அவரவர்களுக்கு பிடித்தவர்களிடமும் பிடித்தவைகளிடமும் அன்பு செலுத்தலாம்..!!
இன்றிலிருந்து
நம்முடைய மனைவி மக்கள்,
பெற்றோர்கள்,
உடன்பிறந்தவர்கள்,
உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள், கள்ளங்கபடமில்லா குழந்தைகள் என அனைவரிடமும் அன்பு செலுத்தி இப்படியும் இந்த தினத்தை கொண்டாடலாம் என உலகிற்கு காட்டலாமே..!
வாழ்க அன்பு தினம்…!
வளர்க நம் அன்பு பாசம்..!!

உங்கள்
நெப்போலியன்.

பிப்ரவரி 14ம் தேதி உலகமெங்கும்  Valentines Day என்ற பெயரில் கொண்டாடப்படும் தினத்தை, காதலர்கள் தவிர மற்றவர்களுடனும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். 

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் காதலர்களுக்கான தினமாகவே இது கருதப்படுகிறது. இது காதலர்களுக்கான தினம் மட்டுமல்ல, அன்பு தினம், மனைவி மக்கள், உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் என அனைவருடனும் அன்பு செலுத்தும் நாளாக கொண்டாட நெப்போலியன் வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழகத்திலும் தமிழர்கள் மத்தியிலும்   “காதலர் தினம்” இனி  “அன்பு தினம்” என்று அழைக்கப்படுமா?

http://www.A1TamilNews.com

 

From around the web