தமிழர்களின் உலக சாதனைக்காகவே அமெரிக்கா வந்தேன்… நடிகர் ஆரி சிறப்புப் பேட்டி!

டல்லாஸ்: நடந்து முடிந்த ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் ‘தாய்மொழியில் கையெழுத்து’ என்ற பிரிவில் தமிழில் கையெழுத்திட்டு உலக சாதனை நிகழ்ந்துள்ளது. கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதை ஒருங்கிணைத்து, உடன் இருந்து நடத்தியுள்ள நடிகர் ஆரி, இந்த சாதனைக்காகவே அமெரிக்கா வந்ததாக தெரிவித்தார். இது குறித்து நடிகர் ஆரி கூறியதாவது: “ஃபெட்னா 2018 தமிழ் விழா நடைபெறுவது குறித்து கவிஞர்.நீலகண்டன் தெரிவித்ததும், விழாவின் முக்கிய அங்கமாகவும், தமிழ் இனத்தின் அடையாளமாகவும் ஒரு கின்னஸ் சாதனை நடத்துவது
 

டல்லாஸ்: நடந்து முடிந்த ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் ‘தாய்மொழியில் கையெழுத்து’ என்ற பிரிவில் தமிழில் கையெழுத்திட்டு உலக சாதனை நிகழ்ந்துள்ளது. கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதை ஒருங்கிணைத்து, உடன் இருந்து நடத்தியுள்ள நடிகர் ஆரி, இந்த சாதனைக்காகவே அமெரிக்கா வந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து நடிகர் ஆரி கூறியதாவது:

“ஃபெட்னா 2018 தமிழ் விழா நடைபெறுவது குறித்து கவிஞர்.நீலகண்டன் தெரிவித்ததும், விழாவின் முக்கிய அங்கமாகவும், தமிழ் இனத்தின் அடையாளமாகவும் ஒரு கின்னஸ் சாதனை நடத்துவது குறித்து பரிசீலித்தோம்.

ஒரு இனத்தின் அடையாளம் அவர்களுடைய தாய் மொழி தான். உலகத்திற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. அதன் பெருமையை உலக அரங்கில் நிலை நாட்டும் வகையில் பல்வேறு கின்னஸ் சாதனை பிரிவுகளை ஆராய்ந்தோம். இறுதியில் ‘தாய் மொழியில் கையெழுத்து’ பிரிவில் தமிழில் கையெழுத்திட்டு சாதனை படைக்க முடிவு செய்தோம்.

தமிழர்களின் உலக சாதனைக்காகவே அமெரிக்கா வந்தேன்… நடிகர் ஆரி சிறப்புப் பேட்டி!

அதற்காக கின்னஸ் அமைப்பில் பணிபுரியும் விவேக் மற்றும் சிலரை தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவாதித்தோம். ஏற்கனவே விவசாயப் பிரிவில் சீன அரசின் கின்னஸ் சாதனையை முறியடித்து, தமிழக மாணவர்களின்
சாதனை நிகழ்த்திய அனுபவம் உண்டு. எனது தன்னார்வ அமைப்பான ‘மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம், பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரே நேரத்தில் 2683 பேர், தலா இரண்டு நாட்டு கத்திரி விதைகளை விதைத்து இந்த சாதனையை நிகழ்த்தினோம்.

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை விழா குழுவினருக்கும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவினருக்கும் ‘தமிழில் கையெழுத்து’ கின்னஸ் சாதனை பற்றி தெரியப்படுத்தியதும், ஆர்வத்துடன் எங்கள் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார்கள். சுமார் 6 மாத காலம் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம்.

கின்னஸ் சாதனை அமைப்பின் உறுப்பினர் விவேக், கவிஞர். நீலகண்டன் மற்றும் நான் உள்ளிட்ட குழு அமெரிக்கா வந்தோம். ஃபெட்னா விழாக் குழுவினர், விழா அரங்கத்தில் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

முன்னதாக இத்தகைய சாதனை நிகழ்வுகள் தோல்வியில் முடிந்த அனுபவங்களையும் நேரில் கண்டவன் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம். விழா அரங்கில் பம்பரமாக சுழன்று பெரியவர்கள், குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். விழாக் குழுவினர்களும் மேடையில் அறிவித்து உற்சாகமூட்டினார்கள். விழாவுக்கு வருகை தந்திருந்த பிரபலங்களை நேரடியாக அழைத்து வந்து கையெழுத்திடச் செய்தேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகள், தாய்மொழியான தமிழில் கையெழுத்திட்ட ஆர்வத்தைப் பார்த்து மெய்சிலிர்த்தது.

மூன்று மணி நேரத்தில் 1173 பேர் கையெழுத்திட்டு உலக சாதனை படைத்தது ஃபெட்னா 2018 தமிழ் விழா. இந்த சாதனையை ஒருங்கிணைப்பதற்காவே சென்னையிலிருந்து டல்லாஸ் வந்தேன். திரைப்பட நடிகராக பங்கேற்கவில்லை. ஒரு தமிழனாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31வது ஆண்டு தமிழ் விழாவில் பங்கு பெற்றது பெருமையாக கருதுகிறேன்” என்று ஆரி குறிப்பிட்டார்.

தற்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல நடிகர் என்றும் பாராமல், தமிழ் மொழிக்காக படப்படிப்புகளை தள்ளி வைத்துவிட்டு அமெரிக்கா வரை வந்து ‘தமிழில் கையெழுத்து’ உலக சாதனைக்காகவும் கின்னஸ் சாதனைக்காகவும் உழைத்திட்ட நடிகர் ஆரியின் சமூக பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

 

 

From around the web