ஆடி மாதத்தின் சிறப்புக்கள்!

ஆடி மாதம் அம்மன் மாதம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சணாயன புண்ணிய காலம் .ஆடி மாதத்தில் கிராமங்களின் காவல் தேவதையாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற சிறு தெய்வங்களுக்கு விழா எடுப்பர். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் மாதம். ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை வரவேற்கும் விதமாக ஆடி பதினெட்டில் பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும்
 

ஆடி மாதத்தின் சிறப்புக்கள்!ஆடி மாதம் அம்மன் மாதம்.  ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய  தட்சணாயன புண்ணிய காலம் .ஆடி மாதத்தில் கிராமங்களின் காவல் தேவதையாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற சிறு தெய்வங்களுக்கு விழா எடுப்பர்.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் மாதம். ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை வரவேற்கும் விதமாக ஆடி பதினெட்டில் பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்படுகிறது.  ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்து. இதனாலேயே  அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

ஆடிமாதத்தில்  செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது என்பது பழமொழி. ஆடி வெள்ளியில்  அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது சக்திகளையும் ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும்.

ஹரியும் சிவனும் ஒன்றே என்று உலகத்திற்கு எடுத்துக் காட்டிய  சங்கரன்கோயில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்கிரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் ஆடிப் பௌர்ணமியில் வருகின்றன.

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதுதவிர மானுட வடிவில் பிறந்து அரங்கனையே மணாளனாக வரித்த ஆண்டாள் பிறந்த அவதார தினமும் இந்த ஆடியிலேயே வருகிறது.

ஆடி அமாவாசை-ஜூலை 20
ஆடிப்பூரம்-ஜூலை 24
ஆடிப்பெருக்கு-ஆகஸ்ட் 2
ஆடிப் பௌர்ணமி-ஆகஸ்ட் 3
கோகுலாஷ்டமி-ஆகஸ்ட் 11

A1TamilNews.com

From around the web