அமலா பாலின் ஆடை… ரசிக்க வைக்கிறதா… முகம் சுளிக்க வைக்கிறதா?

படத்தின் துவக்கம் ஒரு சிக்ஸர். கேரளாவில் முன்னர் நிகழ்ந்த பெண்களுக்கெதிரான கொடுமையான ஒரு விஷயத்தைப் பதிவு செய்தது சரியான டேக் ஆஃப். அடுத்து அமலா பாலின் அறிமுகக் காட்சியில் இது பேய்ப் படம் என்று நினைக்க வைத்து கொடுத்த ட்விஸ்ட் ..ஒரு சூப்பர் பவுண்ட்ரி. அதன் பிறகு இடைவேளை வரை சிங்கிள்ஸ், டபுள்ஸ் என்று ரன்கள் மெதுவாக ஏறுகின்றன. அமலா பாலின் நண்பர் அவரைக் காதலிப்பதாகச் சொல்லி.. அவர் மறுத்ததும்..தன் நண்பர்கள் ரகசியமாக அதை வீடியோ எடுப்பதைப்
 

அமலா பாலின் ஆடை… ரசிக்க வைக்கிறதா… முகம் சுளிக்க வைக்கிறதா?
டத்தின் துவக்கம் ஒரு சிக்ஸர்.

கேரளாவில் முன்னர் நிகழ்ந்த பெண்களுக்கெதிரான கொடுமையான ஒரு விஷயத்தைப் பதிவு செய்தது சரியான டேக் ஆஃப்.

அடுத்து அமலா பாலின் அறிமுகக் காட்சியில் இது பேய்ப் படம் என்று நினைக்க வைத்து கொடுத்த ட்விஸ்ட் ..ஒரு சூப்பர் பவுண்ட்ரி.

அதன் பிறகு இடைவேளை வரை சிங்கிள்ஸ், டபுள்ஸ் என்று ரன்கள் மெதுவாக ஏறுகின்றன.

அமலா பாலின் நண்பர் அவரைக் காதலிப்பதாகச் சொல்லி.. அவர் மறுத்ததும்..தன் நண்பர்கள் ரகசியமாக அதை வீடியோ எடுப்பதைப் பார்த்ததும் அது அமலா பாலை பிராங்க் செய்ய நினைத்து சொன்னது என்று சமாளிக்கும் காட்சி..அருமை!

பல காட்சிகளில் ட்ரென்டியான உடனே புன்னகைக்க வைக்கும் ஒன் லைனர்கள் நிரம்பியிருக்கின்றன.

ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு மழை வந்து கெடுத்த ஆட்டம் போல கொஞ்சம் பிசுபிசுத்து..படத்தின் கடைசி 15 நிமிடங்களில் 400 மீட்டர் ரேசில் கடைசி 100 மீட்டரின் வேகத்தில் மொத்தக் கதையையும் அவசர அவசரமாக சொல்லி முடிக்கிறார்கள்.

அமலா பால் வெளிநாட்டில் உள்ளது போல முழு நிர்வாணமாக தொலைக்காசியில் செய்தி வாசிக்கத் தயார் என்று சர்வசாதாரணமாகப் பேசும் ஒரு பெண் என்று சொல்லிவிட்டு..அவர் நிர்வாணமாக இருக்கும் போது அவருக்கு அத்தனை பதட்டம் ஏற்படுவது மிகையாக சித்தரிககப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் அநியாயத்திற்கு நீளம்!

அமலா பாலின் பாத்திரப் படைப்பில் உள்ள கிரே ஷேடை கடைசியில் லேசாக மாற்றியிருந்தாலும் படத்தின் கடைசியில் வரும் பெண்தான் கதாநாயகியாக நிற்கிறார். ஆனால் அமலா பாலிடம் புதிய எக்ஸ்ப்ரஷன்களைப் பார்க்க அந்தப் பாத்திரப் படைப்பு உதவுகிறது.

அந்த பாதிக்கப்பட்ட பெண் பழி வாங்குறார். ஆனால் பழி வாங்க இதைச் செய்யவில்லை என்கிறார். மன்னிப்பு கேட்கிறார். சமூகத்திற்கு கருத்து சொல்கிறார். அதை அமலா பாலே மறுத்துப் பேசுகிறார். அவர் சொல்லும் ஃபிளாஷ்பேக் கதையில் அவரின் அம்மா இறந்திருந்தாலும் அதை பெரிய பாதிப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. அப்படியிருக்க.. தன் ஒரு வருடம் வீணானதற்காக ஒரு நல்ல பெண் இன்னொரு பெண்ணை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்த நினைப்பாரா என்கிற அடிப்படையான கேள்வி எட்டிப் பார்க்கிறது.

விளையாட்டு வினையாகும், எச்சரிக்கை! – என்கிற ஒரு வரிக் கதையின் அடிப்படையில் பல கதைகள் வந்திருந்தாலும் மீடியாவின் ப்ராங்க் நிகழ்ச்சியை மையமாக வைத்து தமிழில் வந்த முதல் படம் குடைக்குள் மழை.

2004ல் குடைக்குள் மழை படம் பற்றி அதன் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் “இது இன்னும் பல வருடங்களுக்கு பின் எடுக்கப்பட வேண்டிய படம். முன்னதாக எடுத்து விட்டேன்” என்று சொல்லியிருந்தார்.

அவர் சொன்னதற்காக அந்தக் கதையின் அடிப்படை விஷயங்களை வைத்துக்கொண்டு அலங்காரங்களை மட்டும் மாற்றித் தயாரித்திருக்கிறார்கள் ஆடை படக் குழுவினர்.

– பட்டுக்கோட்டை பிரபாகர்

From around the web