என்ன தான் சொன்னார் ரங்கராஜ் பாண்டே? ஒரு ரஜினி ரசிகரின் குரல்!

முதலில் பாண்டேவின் நேற்றைய பேச்சில் நல்லதே இல்லையா என என்மீது கோபப்படும் தலைவர் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளும் இது . ஆம் பாண்டே நன்றாக பேசினார்..அரசியல் எதார்த்தங்களை புட்டு புட்டு வைத்தார்.ஆனால் அதோடு நிற்கவில்லை. போகிற போக்கில் சில விசமங்களையும் சேர்ந்தே விதைத்துச் சென்றார். அதில் முக்கியமான ஒன்று “ஜெயிப்பேன் என்று தெரிந்தால் தான் உங்கள் தலைவர் களம் இறங்குவார் அது வரை அது சந்தேகம் தான்” என்றது.ரஜினி வரவே மாட்டார் என்று ஏளனம் பேசும்
 

என்ன தான் சொன்னார் ரங்கராஜ் பாண்டே? ஒரு ரஜினி ரசிகரின் குரல்!முதலில் பாண்டேவின் நேற்றைய பேச்சில் நல்லதே இல்லையா என என்மீது கோபப்படும் தலைவர் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளும் இது .

ஆம் பாண்டே நன்றாக பேசினார்..அரசியல் எதார்த்தங்களை புட்டு புட்டு வைத்தார்.ஆனால் அதோடு நிற்கவில்லை. போகிற போக்கில் சில விசமங்களையும் சேர்ந்தே விதைத்துச் சென்றார். அதில் முக்கியமான ஒன்று “ஜெயிப்பேன் என்று தெரிந்தால் தான் உங்கள் தலைவர் களம் இறங்குவார் அது வரை அது சந்தேகம் தான்” என்றது.ரஜினி வரவே மாட்டார் என்று ஏளனம் பேசும் ஏனைய ஊடக நெறியாளர்களின் பிதற்றல் பேச்சுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த பேச்சு.

70 வயதில் மிக்க புகழொடும் மிக்க செல்வாக்கோடும் செல்வத்தோடும் சூப்பர்ஸ்டார் எனும் நிரந்தர அந்தஸ்தோடும் நிற்கும் நம் தலைவர் 2021 இல் களமிறங்கப்போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. ஒரு வெற்றி/ தோல்வி அதைத் தீர்மானிக்கும் அல்லது தடுத்துவிடும் என்று சொல்வது விசமம் இல்லையா.நம்மையும் அவர் வருவார் என்று காத்திருக்கும் மக்களையும் அது எவ்வளவு பாதிக்கும் என தெரியாதவரா இந்த பாண்டே? இந்த தவறை குறிப்பிடவே கூடாதா?

அடுத்து நம் காவலர்களின் உழைப்பை புரியாமலேயே, தெரியாமலேயே அல்லது தெரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே நமக்கு அரசியல் பாடம் எடுக்க நினைக்கிறார். நல்லது.96இல் திமுக வெற்றி பெற்றதற்கு நமது களப்பணி தான் முக்கிய காரணம். களப்பணி தெரியாமலா 2004இல் பா.ம.க வை எதிர்த்து அசுரத்தனமாக வேலை செய்தார்கள் நம் காவலர்கள். இப்போதும் பல்வேறு மாவட்டங்களில் தலைவர் வராமலேயே பூத் கமிட்டியை 90% முடித்துக் காட்டியிருக்கின்றனர்.. உறுப்பினர்களைச் சேர்த்துள்ளனர்.

அதே போல் போகிற போக்கில் கல்வித்துறையில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் என்று சொல்லி, ரஜினி ரசிகர்களுக்கு பட்ஜெட் குறித்தோ, துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகள் குறித்தோ எதுவுமே தெரியாது என்கிற அளவுக்கு நம்மை மிகக்குறைவாக மதிப்பீடு செய்கிறாரா பாண்டே? அல்லது இத்தனை கோடி ரூபாய் பணத்தை மட்டுமே குறிப்பிடுவதன் மூலம் கவனச்சிதறலை ஏற்படுத்துகிறாரா?

அரசியல் கட்சிகளுக்கு இணையாக நலத் திட்ட உதவிகள், கஜா புயல் நிவாரணம், குடிநீர் விநியோகம்,மருத்துவ உதவி என தொடர்ந்து உழைத்தும் வருகின்றனர். பாண்டே இதை குறிப்பிட்டு பாராட்டி பிறகு இது போதாது இன்னும் செய்யுங்கள் என சுட்டியிருப்பாரே என்றால் அவரின் கருத்தை ஆமோதித்து வரவேற்றிருக்கலாம்..

ஆனால் நம் காவலர்களுக்கு அரசியலே தெரியாது என்பதாகத்தானே பாண்டே பேசினார் . மற்ற ஊடகத்தினர் தான் இவற்றையெல்லாம் வேண்டுமென்றே மறைக்க நினைக்கின்றனர். நம்மை கூர்ந்து நோக்கும் பாண்டேவுமா மறைக்க நினைக்கிறார்..?இதை ஏன் எனக்கேட்காமல் எப்படி இருக்க முடியும்..?

விஜயகாந்த,ஆர்.எஸ்.எஸ்,திக, திமுக என தேவையில்லாத ஒப்பீடுகளின் மூலம் தலைவரை சிறுமைப்படுத்தவும் பாண்டே தவறவில்லை.. மாற்று அரசியல் என முன்னெடுத்து ஒரே தேர்தலில் கூட்டணி வைத்து எதிர்கட்சித் தலைவராகி தேர்தலுக்கு தேர்தல் பேரம் பேசி கட்சிக்காரர்களை துச்சமென மதித்து அரசியல் செய்து இன்று கூடாரம் காலியாகிப்போய் உள்ள விஜயகாந்தை நம் தலைவரோடு ஒப்பிடுவது என்னைப் பொறுத்த வரை ஏற்கவே முடியாதது.

திரும்பத்திரும்ப விஜயகாந்த் தலைவரை விட தொண்டர் பலம் மிக்கவர் என்பதை பாண்டே நிறுவ முயற்சிக்கிறார்.. இது உண்மை இல்லை.இதை நாம் தான் குறிப்பிட்டே ஆக வேண்டும். விஜயகாந்த் பரவலான ரசிகர் பலம் உள்ளவர் தான்.. ஆனால் அவரின் ரசிகர் பலத்தை தலைவருடன் ஒப்பிடவே இயலாது. 234 தொகுதிகளிலும் சுற்றிச் சுழன்றும் அவர் பெற்றது வெறும் 8.5% வாக்குகள்.

எந்த உழைப்பும் இல்லாமலேயே தலைவரால் 20% வாக்கை பெற முடியும். இதை யாரேனும் மறுப்பீர்களா? அதே போல இயக்க அரசியல் செய்யும் அமைப்புகள் போல ரஜினி மக்கள் மன்றமும் செயல்பட வேண்டுமாம். உங்களுடைய ஆசை அதுவாக இருக்கலாம் பாண்டே சார். தலைவர் அதை சொல்லட்டும்.. நீங்கள் யார் மன்றம் வேறு கட்சி வேறு என்று சொல்ல?  “40 ஆண்டுகளாக ரசிகனாக இருப்பது மட்டுமே கட்சியில் சேர அடிப்படை இல்லை “என்று  தலைவர் சொன்னார் என்பதை பிடித்துக்கொண்டு, அவர் ரசிகர்களையே கிட்ட வைத்துக்கொள்ள மாட்டார் என்ற ரேஞ்சுக்கு சிலர் பேசுகிறார்கள்.

“ஆமாம் எங்களுக்கும் அரசியல் தெரியும்..என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் சொல்லித்தர வேண்டாம்” என்பதும் தலைவரே சொன்ன வார்த்தைகள் தான். நாளை கட்சி என்று வந்துவிட்டால் ஆயிரம் பேர் வருவர்.ஆயிரம் பேர் போவர். உண்மையான ரசிகன் இருந்து கொண்டே தான் இருப்பான். பதவிக்கும் பணத்துக்கும் உழைப்பவனல்ல ரஜினி ரசிகன்.. தலைவர் முதல்வராக வேண்டும் அவ்ளோ தான்.. அதே நேரத்தில் எங்கள் எண்ணவோட்டம் புரியாதவருமில்லை தலைவர். யாரை எங்கே வைக்க வேண்டும் என வைக்கவும் தவறமாட்டார். பூசல்கள் பிணக்குகளையெல்லாம் கட்சி ஆபீசில் அவர் கண்ணசைவில் சரிசெய்துவிடுவார்..

உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி பாண்டே சார்.

– ஜெ.ஜெயசீலன்
.

From around the web