ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… பாஜகவின் ஆணவத்தின் மீது விழுந்த அடி!

“பேச்சாட பேசுனீங்க” என்று ஒரு காட்சியில் தன் எதிரிகளைப் பார்த்துக் கேட்பார் வடிவேலு. ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகளை பார்த்தப் பிறகு நாடே கேட்டுக்கொண்டிருக்கிறது. மத்தியிலும், பெருப்பான்மையான மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த அத்துமீறல்கள், உரிமை மீறல்கள், பொருளாதார கிறுக்குத்தனங்கள், மத சகிப்பின்மைகள் கொஞ்சமல்ல. அதிலும் உத்தர பிரதேசம் போன்ற நாட்டின் பெரிய மாநிலத்தில் பாஜக முதல்வர் ஒருவர் செய்யும் அழிச்சாட்டியங்கள் மத போதையின் உச்சம். பொருளாதாரத்தின் அடிப்படை
 

 

 

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… பாஜகவின் ஆணவத்தின் மீது விழுந்த அடி!

பேச்சாட பேசுனீங்க” என்று ஒரு காட்சியில் தன் எதிரிகளைப் பார்த்துக் கேட்பார் வடிவேலு. ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகளை பார்த்தப் பிறகு நாடே கேட்டுக்கொண்டிருக்கிறது.

மத்தியிலும், பெருப்பான்மையான மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த அத்துமீறல்கள், உரிமை மீறல்கள், பொருளாதார கிறுக்குத்தனங்கள், மத சகிப்பின்மைகள் கொஞ்சமல்ல. அதிலும் உத்தர பிரதேசம் போன்ற நாட்டின் பெரிய மாநிலத்தில் பாஜக முதல்வர் ஒருவர் செய்யும் அழிச்சாட்டியங்கள் மத போதையின் உச்சம்.

பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்புகள், கோட்பாடுகள் போன்ற எதையுமே மதிக்காமல், புரிந்து கொள்ளாமல் பிரதமர் மோடி திடுதிப்பென்று கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமான முடிவுகள் போன்றவை நாட்டை எந்த அளவுக்கு சீர்குலைத்துள்ளது என்பது வரும் நாட்களில் வெட்டவெளிச்சமாகும்.

இதையெல்லாம் புரிந்துக் கொண்டு தான் நாட்டின் முக்கிய பொறுப்பிலிருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர், பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட பலரும் பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு தெறித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில்தான் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலுமே ஆளும் கட்சியான பாஜக தோல்வியை தழுவியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானப் பிறகு அக்கட்சிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி இதுதான்.

பதினைந்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து மிசோரமில் மட்டும் தான் காங்கிரஸ் சறுக்கி இருக்கிறது. தெலுங்கானாவில் எதிர்பார்த்தபடி சந்திரசேகரராவ் முதல்வராகியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்கள் கூட இல்லாத நிலையில் நடந்த இந்த ஐந்து மாநில தேர்தல்கள் பொது தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப் படுகிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவின் மோடி அரசும் அக்கட்சியின் வழி நடத்துணர்களான ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவாரங்களும் செய்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மக்கள் கொடுத்திருக்கும் முதல் அடி இந்த தேர்தல் முடிவுகள்.

முதன்மை ஆசிரியர்
– வணக்கம் இந்தியா

From around the web