ஆத்தா மகமாயீ அவன எங்கிருந்தாலும் காப்பாத்து!

ஒத்தப் புள்ள பெத்து வச்சேன் சொத்தெயெல்லாம் தள்ளி வச்சேன் செத்த நேரம் உன்ன மறந்தா பெத்த மனம் பரிதவிச்சேன்! காலமும் உருண்டுச்சு -எங் காளையும் வளந்துச்சு கண்ணு ரெண்டும் பூரிச்சு போவ கண்ணா உன்ன பார்த்திருந்தேன்! பள்ளிக்கூடம் நீயும் போன பால்வித்து,முட்ட வித்து பட்டத்து மகாராசா தோத்து போவ பவுடர் போட்டு அனுப்பி வச்சேன்! கல்லூரி காலத்துல ஒருநா- உன் கால் செருப்பும் அறுந்துடுச்சு கால் காசு கையில் இல்ல கண்ணால தண்ணி விட்டேன்! எல்லாபடிப்பும் முடிச்சுருச்சு
 

ஆத்தா மகமாயீ  அவன எங்கிருந்தாலும்  காப்பாத்து!

ஒத்தப் புள்ள பெத்து வச்சேன்
சொத்தெயெல்லாம் தள்ளி வச்சேன்
செத்த நேரம் உன்ன மறந்தா
பெத்த மனம் பரிதவிச்சேன்!

காலமும் உருண்டுச்சு -எங்
காளையும் வளந்துச்சு
கண்ணு ரெண்டும் பூரிச்சு போவ
கண்ணா உன்ன பார்த்திருந்தேன்!

பள்ளிக்கூடம் நீயும் போன
பால்வித்து,முட்ட வித்து
பட்டத்து மகாராசா தோத்து போவ
பவுடர் போட்டு அனுப்பி வச்சேன்!

கல்லூரி காலத்துல ஒருநா- உன்
கால் செருப்பும் அறுந்துடுச்சு
கால் காசு கையில் இல்ல
கண்ணால தண்ணி விட்டேன்!

எல்லாபடிப்பும் முடிச்சுருச்சு
எல்லைச்சாமி துணையால
எஞ்சிங்கம் பொழப்புதேட
எம பயமும் போயிருச்சு!

கையில கொஞ்சம் காசு வர
கருமாரி துணையிருந்தா
கட்டின எம்புருசனும் நானும்
கண்ண மூடித் திரிஞ்சிருந்தோம்!

கல்யாணம் கட்டி வச்சோம்
கால்கட்டும் போட்டு வச்சோம்
காலமும் உருண்டுச்சு-எங்
கண்ணும் எம்ம மறந்துருச்சு!

நாள்தோறும் பேசிக்கிடந்தோம்
நாளும் கொஞ்சம் ஆண்டாச்சு
நாடு தாண்டி மகன் போவ
நனவெல்லாம் கனவாச்சு!

ஆண்டும் பல உருண்டுருச்சு
அலுத்து மனசும் வெறுத்துருச்சு
ஆயிரம் காரணம் இருக்கு
அம்மா அப்பா வேணாங்க
ஆத்தா மகமாயீ
அவன் எங்கிருந்தாலும்
காப்பாத்து!

– த.ச.பிரதீபா பிரேம், அட்லாண்டா, யு.எஸ்.ஏ

From around the web