தமிழகத்தை கதிகலங்க வைக்கும் புது பிரச்சனை!அதிர்ச்சியில் விவசாயிகள்!

கொரோனாத் தொற்றுக்கு அடுத்தபடியாக தமிழக விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பது வெட்டுக்கிளிகள் தான். பொதுவாக இந்தப் பருவத்தில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் விவசாய விளை பொருட்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும். ஆப்பிரிக்காவில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் சமீபத்தில் ராஜஸ்தானில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான வேளாண் பயிர்களை நாசம் செய்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை பறந்து செல்லும் இயல்புடையவை. தற்சமயம் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும்
 

தமிழகத்தை கதிகலங்க வைக்கும் புது பிரச்சனை!அதிர்ச்சியில் விவசாயிகள்!கொரோனாத் தொற்றுக்கு அடுத்தபடியாக தமிழக விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பது வெட்டுக்கிளிகள் தான். பொதுவாக இந்தப் பருவத்தில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் விவசாய விளை பொருட்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும்.

ஆப்பிரிக்காவில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் சமீபத்தில் ராஜஸ்தானில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான வேளாண் பயிர்களை நாசம் செய்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை பறந்து செல்லும் இயல்புடையவை. தற்சமயம் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன .

இதனால் டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெட்டுக்கிளிகளை வரவிடாமல் இருக்க தெளிக்க வேண்டிய பூச்சிகொல்லிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

டிரோன்கள் மூலம் வெட்டுகிளிகளின் பரவல் வேளாண் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என வேளான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊட்டியில் புதிய ரக வெட்டுக்கிளிகள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரக வெட்டுக்கிளிகளைப் பிடித்து ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web