வாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்!

கல்லூரிப் பேராசிரியர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது தான் வாட்சப் முகநூல் மொபைல் சமூக ஊடகம் இணையம் என்று எல்லாம் வந்துவிட்டதே, மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன் அதிகரித்துள்ளதா? அவர்களின் தகவல் அறிவு உங்களை சீண்டுகிறதா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரே குரலில் சொல்கிறார்கள். முன்னை விட மாணவர்கள் இப்போது கடனுக்கு கல்லூரி வருவது போல தெரிகிறது. அப்படியெல்லாம் சுண்டி இழுக்கும் கேள்விகளோ தாகமோ வெளிப்படவில்லை. சராசரியாக இருபது வருடங்கள் வரை பல மாணவர்களை
 
கல்லூரிப் பேராசிரியர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது தான் வாட்சப் முகநூல் மொபைல் சமூக ஊடகம் இணையம் என்று எல்லாம் வந்துவிட்டதே, மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன் அதிகரித்துள்ளதா? அவர்களின் தகவல் அறிவு உங்களை சீண்டுகிறதா என்று கேட்டேன். 
 
அதற்கு அவர்கள் ஒரே குரலில் சொல்கிறார்கள். முன்னை விட மாணவர்கள் இப்போது கடனுக்கு கல்லூரி வருவது போல தெரிகிறது. அப்படியெல்லாம் சுண்டி இழுக்கும் கேள்விகளோ தாகமோ வெளிப்படவில்லை. சராசரியாக இருபது வருடங்கள் வரை பல மாணவர்களை சந்தித்து வந்த எல்லா ஆசிரியர்களும் இதையே சொல்கிறார்கள்.
 
இதை ஒரு ஆய்வாக மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம் இருக்கிறது. இந்த ஸ்க்ரீன் நோண்டுதல் passive activityயாகவே பலருக்கும் இருப்பதால் மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன் அல்லது கவனிக்கும் திறன்கள் எல்லாம் குறைகிறது. அவர்கள் வாட்சப் முகநூலை கிசுகிசுத் தளங்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதே பதில். 
 
வேலை பார்க்கும் இடங்களிலும் இத்தகைய சூழலைப் பற்றி பலரும் பேசுகிறார்கள்.பலரிடம் நேரடியாக பத்து நிமிடம் பேசுவதற்குள் இரண்டு மூன்று அழைப்புகள். நம்மிடம் பேசிக் கொண்டே போன் நோண்டுகிறார்கள். 
 
மனதளவில் passive activity சுகமாக இருப்பதால் மாணவர்களின் கவனம் முழுமையாக இல்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். நாம புதுசா ஒரு சிக்கலில் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.
 
– இளங்கோ கல்லணை

From around the web