முழிச்சவுடன் முதல் வேலை என்ன தெரியுமா?

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் 80 சதவிகிதம் பேர் காலையில் முதல் வேலையாக தங்களது செல்ஃபோனை பார்ப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தனியார் ஆலோசனை நிறுவனம் ஒன்று இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 85 சதவித மக்கள் தங்களது இமெயில் மற்றும் சமூகவலைதள கணக்குகளை பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரை 70 சதவிகிதத்திற்கும் அதிகமான
 

முழிச்சவுடன் முதல் வேலை என்ன தெரியுமா?இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் 80 சதவிகிதம் பேர் காலையில் முதல் வேலையாக தங்களது செல்ஃபோனை பார்ப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தனியார் ஆலோசனை நிறுவனம் ஒன்று இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 85 சதவித மக்கள் தங்களது இமெயில் மற்றும் சமூகவலைதள கணக்குகளை பார்க்கிறார்கள் என்பது தெரிய‌‌வந்துள்ளது.

காலை 9 மணி முதல் 12 மணி வரை 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் செய்திகளை செல்போன் மூலம் அறிந்து கொள்வதாகவும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இசை மற்றும் உணவு ஆர்டர் செய்யும் செயலிகளை அதிகளவில் பயன்படுவதா‌‌‌‌கவும்‌‌ ஆய்வு முடிவு கூறுகிறது. மாலை 4 மணி முதல் 7 மணி வீடு திரும்பும் நேரத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை உணவு மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கும் செயலிகளும் கல்வி சார்ந்த செயலிகளும் பயன்படுத்தப்படுவதும் தெரிய வந்துள்ளது.

முழிச்சவுடன் முதல் வேலை என்ன தெரியுமா?

இரவு 10 மணிக்கு மேல் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க மக்கள் தங்களது செல்போன்களை பயன்படுத்துவதும் தெரி‌யவந்துள்ளது‌‌‌. ஆன்லைன் பயன்பாட்டை பொறுத்தவரை 68 சதவித மக்கள் வீடியோக்களையே அதிகம் விரும்புவதாக தெரியவந்துள்ளது. 70 சதவித மக்கள் இணைய தேடுதல்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு உள்ளூர் மொழிகளையே பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

80 சதவித மக்கள் காலை கண்விழித்தவுடன் தங்களது செல்போன்களை பயன்படுத்துவதாகவும் புள்ளி வி‌‌‌வ‌ரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமபுரங்களில் 81 சதவித மக்கள் இணைய தேவைக்கு தங்களது செல்போன்களை பயன்படுத்துவதும் தெரிய‌வந்துள்ளது‌

A1TamilNews.com

From around the web