வழிக்கு வந்த அதிபர் ட்ரம்ப் ! மெக்சிகோ அதிபருக்கு குவியும் பாராட்டுகள்!!

எல்லையில் 10 ஆயிரம் வீரர்களை கூடுதலாக அனுப்பியும், fentanyl மருந்து கடத்தலைக் கட்டுப்படுத்துவேன் என்ற உறுதியையும் கொடுத்து, அதிபர் ட்ரம்ப் விதித்த 25 சதவீத கூடுதல் வரியிலிருந்து 30 நாட்களுக்கு இடைக்கால தடை பெற்றுள்ளார் மெக்சிகோ அதிபர் க்ளாடியா ஷென்பாம்.
பொதுவெளியில் ராஜதந்திரமாகப் பேசியும், சரியான பேச்சுவார்த்தை நடத்தியும் அதிபர் ட்ரம்ப்-ன் நடவடிக்கைகளிலிருந்து மெக்சிகோவை காப்பாற்றியுள்ளார் என மெக்சிகோ அரசியல்வாதிகளும், பல்துறை வல்லுனர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் ன் கூடுதல் வரிவிதிப்பு இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் மெக்சிகோவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் கேட்டிருந்தவாறே எல்லையில் கூடுதல் படை fentanyl மருந்து கடத்தலை தடுப்பது என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டதால் ட்ரம்ப்-க்கு கிடைத்த வெற்றியாகவும் இது கருதப்படுகிறது.
ஆக, இரு தரப்பினரும் சேதாரம் இன்றி தப்பித்துக் கொண்டுள்ளனர். 30 நாட்கள் தடை நிரந்தரமாக நீடிக்கும், கூடுதல் வரி விதிப்பு என்பதே இருக்காது என்றே நம்பப்படுகிறது