இங்கிலாந்தில் பரபரப்பு.. மன்னரை நோக்கி பறந்து வந்த முட்டை!! கல்லூரி மாணவர் கைது

 
england

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் 70 ஆண்டு காலம் ராணியாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த எலிசபெத் ராணி, கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். ராணி எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

england

புதிதாக மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட சார்லஸ் அவரது மனைவி ராணி கமிலா இன்று அந்நாட்டின் யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றனர். அம்மாகாணத்தின் மிக்லிகெட் பார் பகுதியில் சார்லஸ் - கமிலா வந்தனர். அவர்களை வரவேற்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் சார்லஸ் - கமிலா மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த முட்டை வீச்சு தாக்குதலில் முட்டை சார்லஸ் மீது விழாமல் தரையில் விழுந்தது. முட்டை வீசியபோது அந்த நபர் 'அடிமைகளின் ரத்தத்தால் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.


இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனை தொடர்ந்து முட்டை வீசி தாக்குதல் நடத்திய 23 வயதான கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். அரசர் சார்லஸ் - ராணி கமிலா மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web