டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கின் தடை நீக்கம் - எலான் மஸ்க் அறிவிப்பு

 
Trump

டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய ட்விட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Trump

தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது. 

இதனையடுத்து, டொனால்ட் டிரம்பை ட்விட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர். 


இந்த நிலையில், எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்பை சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து, டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு ட்விட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

From around the web