கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டென்டைன் மரணம்!!

 
constantine

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் 2-ம் கான்ஸ்டென்டைன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.

1964 முதல் 1973 வரை கிரீஸ் நாட்டின் மன்னராக பதவி வகித்தவர் கான்ஸ்டென்டைன் II. இவர் தனது 13 வயதில் அரியணை ஏறியபோது, ​​​​ஏற்கனவே பாய்மரத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பெருமையை அடைந்த இளமை மன்னர், மிகவும் பிரபலமானார்.

கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார்.

constantine

இதில் கிரீஸ் நாட்டில் உள்ள மன்னரின் சொத்துக்களுக்காக 1.370 கோடி யூரோக்களை இழப்பீடாக கான்ஸ்டென்டைன்  குடும்பத்தினர் பெற்றனர். இதில் ஏதென்ஸ் நகருக்கு வடக்கே இருக்கும் டாடோய் அரண்மனைத் தோட்டம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. எடின்பர்க் இளவரசர் பிலிப் பிறந்த கோர்பு நகரில் உள்ள அரண்மனை தற்போதுஅருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

2-ம் கான்ஸ்டென்டைன் , அவரின் மனைவி அன்னே மேரி ஆகியோருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கிரீஸ் நாட்டுக்கு இவர்கள் குடும்பத்தினர் வரும் முன் லண்டனில் வசித்துள்ளனர்.

ஏதென்ஸ் நகரில் கடந்த ஆண்டு கடைசியாக 2-ம் கான்ஸ்டென்டைன்  மக்களைச் சந்தித்தார். அப்போதே மிகவும் உடல்நலக்குறைவோடு செயற்கை சுவாசத்தின் உதவியோடு வாழ்ந்து வந்தார். வயது மூப்பு, இதயக்கோளாறு போன்றவற்றால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்ட 2-ம் கான்ஸ்டென்டைன் ஏதென்ஸ் நகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

constantine

2-ம் கான்ஸ்டென்டைன்  க சகோதரி சோபியா, ஸ்பெயின் முன்னாள் மன்னர் ஜூவான் கார்லோஸின் மனைவியாவார். பிரிட்டனின் மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெர்க் டியூக் மன்னர் பிலிப், 2-ம் கான்ஸ்டென்டைனின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web