ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை!! ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக புகார்!

 
Ration-card

ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து கூட்டுறவுத்துறை விற்பனையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். 

Ration

அந்த வகையில் தமிழ்நாட்டில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போலி பில் போடும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அனைத்து விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ration

மேலும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web