தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடி... குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்

 
MKS

தமிழ்நாடு காவல்துறைக்கு மிக உயரிய குடியரசுத் தலைவர் சிறப்பு கொடியை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு மிக உயரிய குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல்துறைக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழ்நாடு.

MKS

தமிழக காவல்துறைக்கு கௌரவமிக்க குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் கொடி வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துணை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழ்நாடு போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

MKS

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடியை துணை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

From around the web