விழுப்புரத்தில் சோகம்; பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

விழுப்புரத்தில் தனியார் பேருந்திலிருந்து இறங்கும் போது பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் என்ற மாணவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளன். இந்த நிலையில், நேற்று காலை வாணியம்பாளையத்திலிருந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்தில் நண்பர்களுடன் பயணித்துள்ளார்.
அப்போது பேருந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அனிஷ் உடன் வந்த நண்பர்கள் ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய உள்ளனர். இதைடுத்து அனீஷ் இறங்க முற்படும் போது நிலை தடுமாறி விழுந்துள்ளான். அப்போது பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
மாணவன் உயிரிழந்தையடுத்து இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி மாணவன் படியில் நின்றவாறு சென்று கீழே இறங்கியபோது நிலை தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்து வானியம்பாளையம் சென்றபோது உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் பேருந்து மீது கற்களை கொண்டு வீசி தாக்கி உடைத்துள்ளனர். பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பேருந்து நடத்துனர், ஓட்டுனர், பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.