தொடரும் சோகம்.. 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

 
chennai

பொதட்டூர்பேட்டை அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா ராமாநாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் தாமு (45). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (30) கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பரிதாபமாக பலியானார். இந்த தம்பதிக்கு கங்ககோத்திரி (14) உள்ளிட்ட 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

suicide

கங்கோத்திரி கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது தாய் இறந்த துக்கம் காரணமாக, அப்போதில் இருந்தே அதிகளவிலான மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி கங்கோத்திரி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dead-body

மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? இது தற்கொலை தானா? பள்ளியில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்சினையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web